ஹூண்டாய் அயானிக் - 6 ஒரே சார்ஜ், 614 கி.மீ., ரேஞ்ச்
ஹூண்டாய் அயானிக் - 6 ஒரே சார்ஜ், 614 கி.மீ., ரேஞ்ச்
ADDED : ஏப் 08, 2025 11:49 PM

'ஹூண்டாய்' நிறுவனம், 'அயானிக் - 6' என்ற அதன் மின்சார செடான் காரை, மேம்படுத்தி காட்சிப்படுத்தி உள்ளது. இந்த கார், முதன்முதலில் 2023 வாகன கண்காட்சியில் அறிமுகமானது.
இந்த காருக்கு, 77.4 கி.வாட்.ஹார்., மற்றும் 53 கி.வாட்.ஹார்., என இரண்டு பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஒரே சார்ஜில், 614 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ள முடியம். ரியர் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய இரு வகையிலும் இந்த கார் வந்துள்ளது.
இது, இந்நிறுவனத்தின் 'ஆர்.எம்., - 22இ' என்ற முன்மாதிரி மின்சார ரேஸ் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றைக் கிழித்து வேகமாக செல்லும் வகையிலான டிசைன், 'அயானிக் -- 9' காரில் உள்ள மெல்லிசான ஹெட் லைட்டுகள், உயரப்படுத்தப்பட்ட போனட், புதிய அலாய் சக்கரங்கள், கருப்பு நிற ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை புதிய மாற்றங்கள்.
உட்புறத்தில், மூன்று ஸ்போக் ஸ்டீயரிங், 12.3 அங்குல இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளே, அலங்கார விளக்குகள், எலக்ட்ரானிக் முன்புற சீட்கள், மூன்று டிஸ்ப்ளேக்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில், இந்த ஆண்டிற்குள் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.

