sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/'இ.சி., - 06' இ.வி., யமஹாவின் முதல் மின்சார ஸ்கூட்டர்

'இ.சி., - 06' இ.வி., யமஹாவின் முதல் மின்சார ஸ்கூட்டர்

'இ.சி., - 06' இ.வி., யமஹாவின் முதல் மின்சார ஸ்கூட்டர்


ADDED : பிப் 04, 2026 07:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 07:50 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'யமஹா' நிறுவனம், 'இ.சி., - 06' என்ற அதன் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, மும்பை, புணே ஆகிய நகரங்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டர் 'ரிவர் இண்டி' மின்சார ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை விட, 'இ.சி., - 06' ஸ்கூட்டரின் விலை, 22,000 ரூபாய் அதிகம்.

இதில், 4 கி.வாட்.ஹார்., லித்தியம் பேட்டரி மற்றும் ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சார்ஜில், 169 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம். டாப் ஸ்பீடு 79 கி.மீ., ஆகும். 480 வாட் வீட்டு சார்ஜரில், பேட்டரியை முழு சார்ஜ் செய்ய, 8 மணி நேரம் எடுக்கிறது. பேட்டரிக்கு, 3 ஆண்டு அல்லது 30,000 கி.மீ., வரை உத்தரவாதம் கிடைக்கிறது.

'வாட்டர் ப்ரூப்' மோட்டார், பேட்டரி, இதர எலக்ட்ரானிக்ஸ் இயந்திரங்கள், 'கலர்டு' எல்.சி.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, டெலிஸ்கோப்பிக் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், மூன்று ரைட் மோடுகள், 24.5 லிட்டர் பூட் ஸ்பேஸ், டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வந்துள்ளன.

பேட்டரி - 4 கி.வாட்.ஹார்., மோட்டார் பவர் - 8.9 ஹெச்.பி., டார்க் - 26 என்.எம்., ரேஞ்ச் - 169 கி.மீ., டாப் ஸ்பீடு - 79 கி.மீ., கிரவுண்ட் கிளியரன்ஸ் - 145 எம்.எம்., பூட் ஸ்பேஸ் - 24.5 லிட்டர் எடை - 132 கிலோ



விலை - ரூ. 1.68 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us