ADDED : செப் 23, 2026 07:35 AM

கேட்டர்பில்லர் நிறுவனம், 'கேட் 355' என்ற பெரிய 'ஹெவி டியூட்டி' எக்ஸ்கவேட்டரை அறிமுகம் செய்துள்ளது. குவாரி, சுரங்கம், பெரிய கட்டுமான பணிகளில் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில், 12.5 லிட்டர், இன் லைன் 6 - சிலிண்டர், 'கேட் சி - 13' என்ற டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. மொத்த செயல்பாட்டு எடை 53 முதல் 54 டன், பக்கெட் கொள்ளளவு 3.8 க்யூ.மீ., டீசல் டேங்க் 715 லிட்டர், அதிகபட்ச வேகம் 4.5 கி.மீ.,ராக உள்ளது.
11.6 மீ நீளம் உள்ள இந்த எக்ஸ்கவேட்டரின் குழி தோண்டும் ஆழம் 6.77 மீ, உயரம் 10.09 மீ, எட்டளவு 10.77 மீ வரை செயல்படும் திறன் உடையது. இதை, மைனஸ் 18 டிகிரி பணி முதல் 52 டிகிரி வெப்பம் வரையிலும், 4,500 அடி உயரமான மலை பகுதிகளிலும் பயன்படுத்த முடியும். உட்புறத்தில், 8 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, புஷ் பட்டன் ஸ்டார்ட், ப்ளூ டூத் வசதி, ஏர் சஸ்பென்ஷன் சீட்கள், பின்புற கேமரா, ஏ.சி., உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
