'தசாவதாரம்' எடுத்த ஏத்தர் இரு ஸ்கூட்டர் உற்பத்தி தளங்கள் அறிமுகம்
'தசாவதாரம்' எடுத்த ஏத்தர் இரு ஸ்கூட்டர் உற்பத்தி தளங்கள் அறிமுகம்
UPDATED : செப் 03, 2025 08:20 AM
ADDED : செப் 03, 2025 08:19 AM

'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம், 'இ.எல்.,' மற்றும் 'ரெடக்ஸ்' என இரு ஸ்கூட்டர் உற்பத்தி தளங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள், மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதில் அமைக்கப்படும் 'ஏத்தர் 3.0' என்ற புதிய ஆலையில், உற்பத்தியாக உள்ளன.
இ.எல்., தளம்
இந்த உற்பத்தி தளத்தில் 'நகர்புற', 'மேக்ஸி ஸ்டைல ் ' மற்றும் 'ஸ்போர்ட்ஸ்' மாடல்களில் மூன்று மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகமாக உள்ளன. இந்த ஸ்கூட்டர்களுக்கு, 'யூனிபாடி ஸ்டீல் சேசிஸ்' வழங்கப் படுவதால், விலை, உற்பத்தி நேரம் மற்றும் பராமரிப்பு மிக குறைவாக இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், 2 முதல் 5 கி.வாட்.ஹார்., ஆற்றல் உள்ள லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்த முடியும். 'பி.எல்.டி.சி., ஹப்' மோட்டார் அமைப்பு, 12 முதல் 14 அங்குல சக்கரங்கள், டிஸ்க் பிரேக், அதிக பூட் ஸ்பேஸ், ஏ.பி.எஸ்., வசதி உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த ஸ்கூட்டர்கள், அடுத்த ஆண்டில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
ரெடக்ஸ்
இது, ஸ்போர்ட்ஸ் பைக்கை போல உருவாக்கப்படும் முன்மாதிரி மின்சார ஸ்கூட்டர் என்பதால், 'மோட்டோ ஸ்கூட்டர்' என கூறப்படுகிறது. குறைந்த எடை அலுமினியம் சேசிஸ், அடாப்டிவ் சஸ்பென்ஷன்கள், ரேஸ் பைக் டயர்கள், 3டி பிரின்டட் சீட்கள், வேகமான பிக்கப் தர 'டேக் ஆப்' வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன.
ஏத்தர் ஸ்டேக் 7.0
இந்நிறுவன ஸ்கூட்டர்களில் உள்ள 'ஏத்தர் ஸ்டேக்' மென்பொருள், அடுத்த தலை முறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் மேம்பாடு, 'ஏ.ஐ.,' வாயிலாக வாய்ஸ் அசிஸ்ட் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, கிராஷ், நோ பார்க்கிங் மற்றும் சாலையில் பள்ளம்,மேடு எச்சரிக்கைகள், செயலியின் வாயிலாக ஸ்கூட்டரை சுவிட்ச் ஆப் மற்றும் சார்ஜிங் ஆப் செய்யும் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது அனைத்தும், மூன்றாம் தலைமுறை '450 எக்ஸ், 450 ஏபெக்ஸ், ரிஸ்டா ஜி' ஆகிய ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.