ADDED : ஏப் 08, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பஜாஜ்' நிறுவனம், உலக அளவில் இரண்டு கோடி 'பல்சர்' பைக்குகளை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில், பல்சர் பைக் மாடலை பொறுத்து, 7,300 ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது.
2001ல் அறிமுகமான இந்த பைக், முதல் ஒரு கோடி விற்பனைகளை, 18 ஆண்டுகளிலும், அடுத்த ஒரு கோடி விற்பனைகளை வெறும் ஆறே ஆண்டுகளிலும் செய்துள்ளது. லத்தீன் அமெரிக்கா முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை, 50க்கும் அதிகமான நாடுகளில் இந்த பைக் விற்பனையாகி வருகிறது.
தற்போது, 125 சி.சி., முதல் 400 சி.சி., பிரிவு வரை பல்சர் பைக்குகள் உள்ளன. 'கிளாசிக்', 'என்.எஸ்.,' 'என்', 'ஆர்.எஸ்.,' உள்ளிட்ட பல்வேறு மாடல்களில் இந்த பைக் விற்பனையில் உள்ளது.

