UPDATED : ஆக 02, 2020 11:27 AM
ADDED : ஆக 02, 2020 12:42 AM

நவீன தமிழ் இலக்கிய தளத்தின், முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் கோவை ஞானி. கோவை சோமனூரில் பிறந்த, இவரின் இயற்பெயர் பழனிசாமி.40 ஆண்டுகளுக்கு மேலாக, அரசு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, வி.ஆர்.வி., நகரில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் காலமானார்.
கண் பார்வை இழந்த நிலையிலும் கூட, கடந்த 32 ஆண்டுகளாக படிப்பதையும், எழுதுவதையும் நிறுத்தவில்லை. வெளியூர்களில் இருந்து கோவைக்கு வரும் எழுத்தாளர்கள், இவரை சந்தித்து ஊரையாடுவதை, இலக்கிய பணியாகவே கருதினர். இவரது இலக்கிய பங்களிப்புக்காக, தமிழக அரசு விருது, கனடா இலக்கிய தோட்டம் இயல் விருது உள்ளிட்ட பல இலக்கிய விருதுகளை பெற்றவர். கோவையில் உருவான வானம்பாடி கவிதை இயக்கத்தின் துவக்க காலத்தில், இணைந்து செயல்பட்ட ஞானி, பிறகு அதிலிருந்து முரண்பட்டு, தனித்து செயல்பட்டார்.
கவிஞர்கள் சிற்பியும், புவியரசும் ஞானியின் சமகாலத்து படைப்பாளர்களில் முக்கியமானவர்கள். தத்துவார்த்த அடிப்படையில், ஞானியின் படைப்பிலக்கிய கோட்பாடுகளில், இவர்கள் இருவருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர்கள் என்ற வகையில், ஞானியின் மீது அன்பும், மரியாதையும் கொண்டவர்கள்.
கவிஞர் சிற்பி: (சாகித்ய அகாடமி விருதாளர்)
கவிஞர் புவியரசு : (சாகித்ய அகாடமி விருதாளர்)
'ஞானிக்காக நான் படித்தேன்!
'மீனா (கோவை ஞானியின் உதவியாளர்) நான், 14 ஆண்டுகள் அவருக்கு உதவியாளராக இருந்திருக்கிறேன். அவர் விரும்பும் நுால்களை படிப்பதுதான் என் பணி. ஒரு வாரம் முழுவதும் படிக்க தேவையான நுால்களை தேர்வு செய்து வைத்து இருப்பார்.நான் படிப்பதை கேட்டு, புரிந்து கொள்வார்.முக்கிய கருத்துகளை அடிக்கோடு போடச்சொல்வார். சில பக்கங்களை மறுபடியும் படிக்க சொல்வார். ஒருமுறை நுாலை படித்து முடித்து விட்டால், அந்த நுாலின் எல்லா பக்கங்களையும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு வெளி வந்த மறுநாளே, அந்த நுாலை படித்து முடித்து விடுவார். பூமணியின் 'அஞ்ஞாடி', சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்' நாவல்களுக்கு, விருது அறிவிக்கும் முன்பாகவே படித்து விட்டார்.நான் வாசிக்கும் போதே, இந்த இரு நுால்களுக்கும் சாகித்ய அகாடமி பரிசு கிடைக்கும் என்று சொன்னார். அதே போல் கிடைத்து. கட்டுரைகளை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதுவேன். தினமும், ஆறு மணி நேரம் அவருக்காக படிப்பதும், எழுதுவதும்தான் என் வேலை.