தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/பெண் அதிகாரி சாபம் பி.டி.ஓ.க்கள் கோபம்

பெண் அதிகாரி சாபம் பி.டி.ஓ.க்கள் கோபம்

பெண் அதிகாரி சாபம் பி.டி.ஓ.க்கள் கோபம்


UPDATED : அக் 20, 2026 12:00 AM

ADDED : அக் 19, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 10:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீ டுகளில் சரஸ்வதி பூஜையை முடித்துவிட்டு, கோவிலுக்குப் புறப்பட்டனர் சித்ராவும், மித்ராவும்.

‘‘மாவட்டத்துல தீபாவளி வசூல் எப்பவும் பட்டையக் கிளப்பும். இந்த வருஷம் எப்படியிருக்கும்க்கா?’’ ஆர்வத்துடன் கேட்டாள் மித்ரா.

‘‘மித்து... இந்த தடவை அடக்கி வாசிப்பாங்கன்னு தோணுது... ‘அஞ்சு, பத்துக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிடாத குமாரு’ன்னு ஆபீசர்ஸ்சும் எச்சரிக்கிறாங்களாம்’’

‘‘அக்கா... ஊரக வளர்ச்சி முகமை ஆய்வுக்கூட்டத்தில ‘பிச்சை எடுக்காதீங்க’ன்னு லஞ்சம் வாங்கற ஆபீசர்ஸ் மேல பாயறாராம் பெண் ஆபீசர். பொதுவா சொன்னாலும் பி.டி.ஓ.க்கள் இதை ரசிக்கல. ‘நான் அம்மன் பக்தை... சாபம் விட்டால் பலிக்கும்’ன்னு வேற சொல்றாங்களாம். இது இறைபக்தி உள்ள பி.டி.ஓ.க்களுக்குத் தர்மசங்கடமா இருக்காம். பலரையும் கோபமூட்டியிருக்காம்.

‘‘பெண் ஆபீசர் நேர்மையானவரா இருக்கலாம். ஆனா, அரசு வாகனத்திலதான் சொந்த ஊரான பரமத்தி வேலுாருக்குப் போறாராம். அவரது மகள் ஸ்கூலுக்குப் போறதும் அரசு வாகனத்திலதானாம்; எப்பவுமே நேர்மையப் பத்திப் பேசுறப்ப, அவங்க ஒருமுறை ‘கண்ணாடி’ முன்னாடி நின்னுப் பார்த்துக்கணும்னு பி.டி.ஓ.க்கள் கமென்ட் பண்றாங்களாம்’’

‘‘மித்து... நேர்மையான ஆபீசர்ஸ் மேல, எப்பவும் மத்தவங்க காட்டமா இருக்கிறதும், குறை சொல்றதும்இயல்புதானே... சரி... அத விடுங்க... ‘வாணி’யம்மாட்ட கேட்டா இன்னும் மேல் விவரம் சொல்லுவாங்க. நெருப் பெரிச்சல் பத்திரப்பதிவு ஆபீஸ்ல லஞ்சம் தலைவிரித்தாடுதாம். ரெண்டு சென்ட், மூனு சென்ட் கிரயத்துக்குக் கூட 30 ஆயிரம் வரைக்கும் லபக்குறாங்களாம்’’

‘‘அக்கா... திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வெளியே நிறுத்தியிருந்த பறிமுதல் வாகனங்களை, போலீசுக்கு உதவிய நபரே திருடி வித்தது தெரியவந்துச்சுல்ல... இப்ப இன்னொரு டிவிஸ்ட். ஹையர் அபீஷியல்ஸ் சொல்லி பறிமுதல் வாகனங் களைக் கணக்குப் பார்த்தப்ப, 20 வாகனங்களைக் காணோமாம். வாகன உரிமையாளர்கள் வந்து கேட்டா என்ன பண்றதுன்னு போலீஸ்காரங்க இப்பத் திருதிருன்னு முழிக்கிறாங்களாம்’’

‘‘மித்து... இதனால்தானோ என்னவோ, சிட்டி போலீஸ் பெண் அதிகாரி தினமும் மைக்குல வழக்கு விவரங்களைக் கேக்குறதோட, ‘ஒவ்வொரு போலீஸ்காரங்களும் சரியா வேலைசெய்யுங்க... சென்னைல இருக்கிற ஆபீசர்ஸ்க்குப் பதில் சொல்ற மாதிரி நிலை உருவாகிடக்கூடாது. தப்பு நடந்தா தண்டனைதான்’னு கறாராக சொல்லியிருக்காங்களாம்’’

‘‘அக்கா... மாவட்ட லிமிட்ல, சிறப்பா பணியாற்றின ஆபீசர்ஸ் முதல் கடைநிலைப் போலீஸ்காரங்க வரை பாராட்டி சர்டிபிகேட் மற்றும் வெகுமதி வழங்கறாங்களாம். இது வரவேற்கக் கூடிய விஷயம்தான். ஆனா, இந்த லிஸ்ட்ல இன்ஸ்பெக்டர்களோட வாகன டிரைவர்கள், ரைட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்... அப்புறம் வேலையே செய்யாதவங்களையும் சேர்த்திருக்காங்கன்னு போலீஸ்காரங்க வருத்தப் படறாங்களாம்’’

‘‘மித்து... அவிநாசி முனிசிபாலிட்டில பணியாற்றிய 50 வயசு நைட் வாட்ச்மேன் ஒருத்தரு, 20 வயசு பொண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்புனாராம். பொண்ணோட தந்தை நகராட்சி ஆபீஸ்ல முறையிட்டாராம். நைட் வாட்ச்மேன், பக்கத்து ‘திருமுருகன்’ நகர ஆளுங்கட்சி செயலாளர்ட்ட தஞ்சமடைஞ்சாராம். அவரும் பஞ்சாயத்துப் பண்ணியிருக்காரு. ஆனா முனிசிபாலிட்டி கமிஷனர், நைட் வாட்ச்மேனை வேலைல இருந்து துாக்கீட்டாராம்’’

‘‘அக்கா... ஜெய்வாபாய் பள்ளி பவள விழா, காலை 9:30 மணிக்குத் துவங்குறதா அழைப்பிதழ்ல போட்ருந்தாங்க. மாணவிகள் 8:30க்கே வந்துட்டாங்க. ஆனா, கலெக்டர் வந்ததோ 11:00 மணிக்குத்தானாம். சோர்வடைஞ்ச மாணவியருக்கு தண்ணீர் வழங்கி ஆசிரியர்கள் நிழல்ல அமரவச்சாங்களாம். தெற்கு எம்.எல்.ஏ. பாலமுருகன் நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு வந்து ஹெச்.எம்.மையும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளையும் பார்த்துட்டுக் கிளம்புனாராம். விழா பேருரைன்னு மாநகராட்சி கமிஷனர் பேரைப் போட்ருந்தாங்க... ஆனா, அவரு நிகழ்ச்சிக்கே வரலையாம்’’

‘‘மித்து... இலைக்கட்சி தொடர்ந்து தோத்துட்டு வந்தாலும் நம்ம மாவட்டத்துல இன்னும் பண்ணையார் மனப்போக்கு போகலையாம். ஆண்டு விழா கொண்டாட்ட ஆலோசனைக்கூட்டத்துல சீனியர்ஸ் முன்னாடி அமர்ந்திருக்க, ஐ.டி. விங், மகளிரணிக்காரங்க மூலைல உக்காந்திருந்தாங்களாம். முந்தைய கூட்டத்தில் இவங்கள்ல சிலரை முன்வரிசைல உக்கார வச்சிருந்தாங்களாம். ஆனா அடுத்த கூட்டத்திலயே யு–-டர்ன் அடிச்சிட்டா, எப்படிக் கட்சி வளரும்ன்னு கேள்வி எழுப்புறாங்க’’

‘‘சித்ராக்கா... ஊத்துக்குளி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர், ‘நவீனமான’ பேரு கொண்டவரு. அவரு இப்ப த.வெ.க.வுல சேர்ந்தவுடனே கிளை நிர்வாகியா பொறுப்பு வழங்கீட்டாங்க... அவரு போன தேர்தல்ல விஜயை சமூக வலைதளங்கள்ல கழுவிக் கழுவி ஊத்துனவராம். ஆனா, அவரு ஜனவரி மாசமே த.வெ.க.வுல இணைஞ்ச மாதிரி சர்டிபிகேட் கொடுத்திருக்காங்களாம். இந்த விஷயம் வைரலாயிடுச்சு... சீக்கிரம் சி.எம். காதுக்குத் தகவல் போயிருமாம்’’

கோவிலை வந்தடைந்தனர் சித்ராவும், மித்ராவும். ‘அன்னை கலைவாணி அருள் தரும் திருநாளில் பொன்னான பொழுதே’ என்ற பாட்டு ஒலித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us