/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
/
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
ADDED : ஆக 04, 2025 10:03 PM

''ஓ ட்டு போட போலாமாக்கா...'' என்று கேட்டபடியே வந்தாள் மித்ரா.
''இப்ப என்ன எலக்ஷனா...'' என்று அப்பாவித்தனமாக கேட்டாள் சித்ரா.
''இல்லக்கா... அசெம்பிளி எலக்ஷனுக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு... கூட்டணியும் முடிவாகல... திருப்பூர்ல இப்பவே கட்சிக்காரங்க களமிறங்க ஆரம்பிச்சுட்டாங்க... தி.மு.க., - அ.தி.மு.க., காரங்க இப்பவே ஓட்டு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க.
''சி.எம்., ஸ்டாலின் 'ரோடு ேஷா' நடத்துறதா இருந்துச்சு... உடல்நலக்குறைவால அது ரத்தாயிடுச்சு... இப்ப குணமடைஞ்சுட்டதால, விரைவில், சி.எம்., வரப்போறாராம்''
''மித்து... புதுப்பிச்சு கட்டப்பட்ட கோவில்வழி பஸ் ஸ்டாண்டையும், வேலம்பாளையத்துல கட்டுன ஜி.ெஹச்.,சையும் சி.எம்., திறந்துவைக்குறதா இருந்துச்சுல்ல... இதுவும் தள்ளிப்போகுதேன்னுதான் கவலையா இருக்குது... எந்த வி.வி.ஐ.பி.,க்காகவும் காத்திருக்காமல், பணிகள் முடிஞ்சவுடனே, திறப்பு விழா நடத்துனாத்தான் என்னவாம்?''
''நீங்க சொல்றது சரிதான்க்கா... ஆனா, கட்டி முடிச்சும் திறக்காம, சி.எம்., - மினிஸ்டர்ஸ்க்காக காத்திருக்கிற அரசு கட்டடங்கள், பாலம் போன்றவை எல்லா ஊர்லயும் இருக்கத்தானே செய்யுது?
''அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பயணம் நடத்திட்டு வர்றாருல்ல... திருப்பூருக்கு அடுத்த மாசம் வர்றாராம்...
''மாநகரச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனும் கட்சி நிர்வாகிகளும் பழனிசாமி வர்றப்ப கூட்டத்தைத் திரட்டுறதுக்காக இப்ப இருந்தே பம்பரம் மாதிரி சுத்தி வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க... டெய்லி, நிர்வாகிகள் கூட்டங்களை பகுதிவாரியா நடத்திட்டு இருக்காங்க...''
''மித்து... திருப்பூர்ல 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்ல திரள்ற கூட்டத்தைப் பார்த்து இதெல்லாம் ஓட்டா மாறும்னு தி.மு.க., காரங்க நெனைக்கிறாங்க... ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்துக்கு வர்றப்ப 'ரோடு ேஷா' இல்லாம போனா, அரசு விழாவில பெரும் கூட்டத்தை எப்படியும் திரட்டப்போறாங்களாம். திருப்பூர்ல பழனிசாமியோட பயணத்துல பிரமாண்டமா கூட்டத்தை திரட்டி 'கெத்து' காட்ட அ.தி.மு.க., காரங்க முயற்சிக்கிறாங்க... இப்பவே தி.மு.க., - அ.தி.மு.க., காரங்க கங்கணம் கட்டி வேலை பார்க்றதப் பார்த்தா நம்மள மாதிரி பொது ஜனங்களுக்கு இப்பவே அடிவயிறு கலங்குது''
''ஆமாக்கா... பா.ஜ.,வுல மலர்க்கொடியை மீண்டும் மாநில செயலாளராக நியமிச்சுட்டாங்கக்கா...''
''மூனாவது முறையா நியமிச்சிருக்காங்க... மாற்றங்களால் மாறாதவர்ன்னு இவரைச் சொல்லலாமா?''
''கரெக்ட்க்கா... பா.ஜ., காரங்களும் தேர்தலுக்காக இப்பவே வியூகங்களை வகுக்க ஆரம்பிச்சுட்டாங்க... மாவட்டத்துல கூடுதல் தொகுதில போட்டி போடணுங்கற லட்சியத்தோட இருக்காங்களாம்''
''மித்து... நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளரா அபிநயாவை கட்சி தலைமை அறிவிச்சிருக்கு... அவரும் இப்பவே ஜரூராக களமிறங்க ஆரம்பிச்சுட்டாரு... பொதுப்பிரச்னைனா உடனே கிளம்பிப் போயிடறாராம்.
''த.வெ.க., காரங்களும் உறுப்பினர் சேர்க்கைல தீவிரமா இருக்காங்கக்கா... ஓட்டை அள்ளுவோம்னு நிர்வாகிங்க சொல்லீட்டு இருக்காங்களாம்''
''மித்து... எல்லாத்தையும் பார்க்கத்தானே போறோம்''
ரஜினி ஸ்டைலில் சொன்னாள், சித்ரா.
ஒதுங்கிய தாமரைக்கட்சி ''சித்ராக்கா... திருப்பூர்ல தி.மு.க., நிர்வாகிக்குச் சொந்தமான பள்ளியில, சிறுமியிடம் துாய்மைப்பணியில் ஈடுபட்ட அசாம் வாலிபர் அத்துமீறினார்ல... பள்ளியை தாமரைக்கட்சி காரங்க பெற்றோரோட சேர்ந்து முற்றுகை செஞ்சாங்க... ஒரு கட்டத்துல போராட்டம் போற போக்கு சரியில்லைன்றதை புரிஞ்சுக்கிட்டு தாமரைக்கட்சிக் காரங்க அங்கிருந்து கிளம்பிட்டாங்களாம்.
''இவங்க போனவுடனே, போலீஸ் கூட்டத்துல இருந்த சிலரை துாக்கி வேன்ல ஏத்தினாங்க... போராட்டமும் கலைஞ்சிருச்சு...
''போராட்டத்தப்ப, சில பத்திரிகைக்காரங்க கிட்ட மொபைல் போனைப் பறிக்கவும், அவங்களை இழுக்கவும் போலீஸ்காரங்க முயன்றாங்க... பெண் அதிகாரிட்ட இதைக் கவனத்துக்கு கொண்டு போனப்ப, சிரிச்சிக்கிட்டே, 'வேணும்னா குரூப் போட்டோ எடுத்துக்கலாமா... அப்பத்தான் நீங்க பத்திரிகைக்காரங்கன்னு தெரியும்'ன்னு கிண்டலா சொன்னாராம்.
''இதனால டென்சனாகி உயரதிகாரிட்ட, பத்திரிகைக்காரங்க மனு கொடுத்திருக்காங்க...''
''மித்து... பத்திரிகைக்காரங் களுக்கு இப்படி நடக்கிறது சகஜம்தானே''
யதார்த்தத்தைச் சொன்னாள் சித்ரா.
கொலை விவ'காரம்' ''சித்ராக்கா... சிட்டில சில நாட்கள் முன்னாடி, போலீஸ் வாகனங்களை கமிஷனர் ஆய்வு செஞ்சாராம்... கடைசி நேரத்துல, 'வாட்டர் வாஷ்' பண்ணிட்டு வந்து நிறுத்திட்டாங்களாம். வெளியே 'பளபள'ன்னு இருந்துச்சு... உள்ளே எப்படி இருந்துச்சுன்னுதான் தெரியல''
''மித்து... தாராபுரத்துல வக்கீல் கொலை விவகாரத்துல, போலீஸ், நகராட்சி சர்வேயர்ன்னு பல தரப்பினரும், பள்ளித் தரப்புக்கு விசுவாசமா இருக்காங்களாம். கோர்ட் உத்தரவு படி, பள்ளியில் முறைகேடாக கட்டிய கட்டடத்தை இடிக்க தாமதம் பண்ணியிருக்காங்க..
''கொலை நடக்கறதுக்கு சற்று முன்னாடி, நகராட்சி சர்வேயர், இட அளவீடு தொடர்பா வக்கீலை அந்த இடத்துக்கு வரச்சொன்னாராம். ஆனா, சர்வேயர் அங்க போகலையாம். ஆனா, வக்கீல் அங்க போயிருக்கார். அப்பத்தான் கொலை நடந்திருக்கு... ஒருவேளை சர்வேயர் அங்க வந்திருந்தா, அரசு அதிகாரிகளும் உடன் வந்திருப்பாங்க... கொலை நடந்திருக்காது... வக்கீல் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சும், போலீஸ்காரங்க முறையா கையாளலைன்னு குற்றச்சாட்டு எழுந்திருக்கு''
''சித்ராக்கா... திருப்பூர் மாவட்ட போலீஸ்ல, உயரதிகாரி துவங்கி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வரை தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருக்காங்களாம். பொதுமக்கள் இவங்களை எப்படித் தொடர்பு கொள்றதுன்னு தெரியாம தவிக்கிறாங்க... தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் யார் அழைச்சாலும் போனை எடுக்கறதில்லையாம். உயரதிகாரிகள் சொல்ற வேலையை செய்யாம 'கெத்து' காட்டுறாராம்''
கிளப்பில் கமுக்கம் ''மித்து... திருப்பூர்ல சமீப காலமாக சர்ச்சைக்குள் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தின கிளப்ல, சில நாள் முன்னாடி, ஒருத்தர் பல லட்சம் பணத்தோட போயிருக்காரு... வரவேற்பு அறை முன் பணப்பையை வச்சிட்டு போனாராம். அதற்குள் பணம் மாயமாயிடுச்சாம். போலீஸ்ல புகார் கொடுக்காம, கிளப்லயே விசாரிச்சாங்களாம். பண விவகாரம் வெளியே தெரிஞ்சா எதுக்கு இவ்ளோ பணத்தைக் கொண்டு வந்தாங்கன்னு மீண்டும் பூதம் கிளம்பும்னு கமுக்கமா இருக்காங்களாம். மொத்தத்துல அங்க என்ன நடந்துச்சுன்னு அங்குள்ள நிர்வாகிகளுக்குத்தான் தெரியும்''
மித்ரா புன்னகை சிந்தினாள்.
''சித்ராக்கா... ஒவ்வொரு பூத்' கிளை வாரியா, அ.தி.மு.க., ஓட்டு குறித்து கணக்கெடுப்பு நடத்துறாங்களாம். ஒவ்வொரு பூத்லயும், ஆதரவு ஓட்டுகளை கணக்கு போடணும்; போன, 2021 சட்டசபை, 2024 லோக்சபா தேர்தல்னு ஒப்பிட்டு பார்த்து, எவ்வளவு கூடியிருக்கு, குறைஞ்சிருக்குனு பார்த்து சரிக்கட்டணும்.
''பா.ஜ., கூட்டணிங்கறதால சிறுபான்மையினர் ஓட்டு வராதுனு நீங்களே முடிவு செய்ய வேண்டாம். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவா இருந்த சிறுபான்மையினரை சந்திச்சு பேசி, 'ஆட்சி மாறப்போகுது... நம்ம ஆட்சிதான் வரப்போகுது... உங்களுக்கு வழக்கம் போல் உதவி செய்வோம்'னு சொல்லி ஓட்டு சேகரிக்கணும்னு 'அசைன்மென்ட்' கொடுத்திருக்காங்களாம்''
வசூலிக்க புது 'பார்முலா' ''மித்து... திருப்பூர் யூனியன்ல, புதுசா ஒரு 'பார்முலா' கண்டுபிடிச்சிருக்காங்க. ஒரே வீட்டுக்கு ரெண்டு வாட்டர் கனெக்ஷன் கொடுத்திருக்காங்கலாம். குறிப்பாக மங்கலமான ஊராட்சில இது ரொம்பவே நடந்திருக்கு... 'அடிஷனல் டேக்ஸ்'ன்னு, 300 ரூபாய்க்கு ஒரு ரசீது போட்டு, அந்த வரியை கணக்கு காட்டி, ஒரு வீட்டுக்கு, ரெண்டாவதா கனெக்ஷன் கொடுத்திருக்காங்களாம்; அதுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை கைமாறியிருக்காம். கேட்டா, பதவியில இருந்த தலைவருங்களை அதிகாரிகள் கைகாட்றாங்களாம்''
''சித்ராக்கா... பாண்டியன் நகர் பக்கத்துல, அம்மன் கோவில் அருகே அடுக்குமாடி வீடு கட்டிட்டு இருக்காங்களாம். அங்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் வீட்டு மின் இணைப்பு இருக்கு; அதை வச்சே, அடுக்குமாடி கட்டுமான பணிக்கு பயன்படுத்திட்டு இருக்காங்கனு புகார் வந்திருக்கு. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். மின் திருட்டு தடுப்பு பிரிவுக்கு புகார் போன பிறகு அதிரடியா ஆய்வு செஞ்சிருக்காங்க. கட்டுமான பணிக்கு, வீட்டு இணைப்பை பயன்படுத்தியதை 'கன்பர்ம்' பண்ணி, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டிருக்காங்க... எப்படியெல்லாம் முறைகேடு நடக்குது பாருங்கக்கா''
புகார்தாரருக்கு மிரட்டல் ''மித்து... கொங்கு மெயின் ரோடு கடைசியில, கருப்பராயன் கோவில் மரத்தை வெட்டியிருக்காங்க. இதுதொடர்பா, நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவங்க, வடக்கு தாசில்தாருக்கு புகார் பண்ணியிருக்காங்க.
''மறுநாள், அந்த பகுதியை சேர்ந்த சிலர், புகார் அளித்தவர் வீட்டுக்கே போயிட்டாங்களாம். 'தாசில்தாருக்கு புகார் பண்ணுன ஆதாரம் இருக்கு, 'ஸ்கிரீன் ஷாட்' வச்சிருக்கோம்'னு சொல்லியிருக்காங்க. 'எல்லோரும் வேடிக்கை பார்த்துட்டு போறாங்க... நீங்க மட்டும் ஏன் புகார் பண்ணீறங்க'னு மிரட்டற மாதிரி பேசிட்டு போயிருக்காங்க.
''தாசில்தார்ட்ட புகார் பண்ணினா, எப்படி மத்தவங்களுக்கு விஷயம் போகுது... மரம் வெட்றது சம்பந்தமா புகார் செஞ்சா 'ரெஸ்பான்ஸ்' இல்லைன்னு சமூக ஆர்வலர்கள் வேதனைப்படறாங்களாம்''
ஆய்வு செய்தால் தெரியும் ''சித்ராக்கா... திருப்பூர்ல நகர்ப்புற வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்ல நீர்வழிப்பாதையில ஆக்கிரமிப்பு செய்து வசித்து வந்தோருக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்கு... ஆனா, பல வீடுகளும் உரிமையாளர்கள் வசிக்காம, வாடகைக்கு விடப்பட்டிருக்கிறதா சொல்றாங்க... ஆய்வு நடத்துனா உண்மை தெரியும்''
''மித்து... போலீஸ் மற்றும் அதிகாரிகள் கெடுபிடி காரணமா, குட்கா விக்கிற கடைக்காரங்க யுத்தியை மாத்திட்டாங்களாம். வாடிக்கையாளர் அட்வான்சா பணம் செலுத்தீட்டா, கடைக்கு சற்று தள்ளி அல்லது ரோட்டின் மறுபுறத்தில் நிற்கும் நபரிடம் சென்று பாக்கெட்களை வாங்கிக்கலாமாம். கடையிலிருந்து சிக்னல் கொடுத்த பின் வாடிக்கையாளர் கைக்கு பாக்கெட் போயிருதாம்''
''சித்ராக்கா... தங்கள் பகுதியில் ஏதாவது குற்றங்கள்ல ஈடுபட்டு வர்ற வெளிமாநில நபர்களுக்கு, திருப்பூர் ரொம்ப பாதுகாப்பா இருக்குதாம்... பெரும்பாலும் பிளாட்பாரக்கடை வியாபாரிகள் மாதிரியும், தள்ளுவண்டிக் கடைகள்ல வேலை செய்யற ஊழியரா மாறியும் பதுங்கிடுறாங்களாம்''
''மித்து... மாநகராட்சி மூனாவது வார்டு, அண்ணா நகர் பகுதில அமைந்துள்ள காலனி பகுதிக்கு கான்கிரீட் ரோடு பணி துவங்கியிருக்காங்க... இதுக்காக கொண்டு வந்த ஜல்லி மற்றும் எம். சாண்ட்டை வழில ஒரு இடத்தில கொட்டியிருக்காங்க... இதில அங்க இருக்கிற தனியார் ஒருத்தரோட கம்பிவேலி சேதமாயிருச்சாம். நட்டியிருந்த கற்கால்கள் உடைஞ்சுருச்சாம். பல ஆயிரம் ரூபாய் செலவுல வச்சிருந்த எச்சரிக்கைப்பலகையையும் யாரோ அறுத்துட்டுப் போயிட்டாங்களாம். யார்ட்ட சொல்லி நிவாரணம் பெறுவதுன்னு இட உரிமையாளர் குழப்பத்துல இருக்கறாராம்''
''சித்ராக்கா... பேசிட்டே இருக்கேன்... தொண்டையெல்லாம் வறளுதே...''
''மித்து... உனக்காகவே ரெடியா ஆரஞ்ச் ஜூஸ் வச்சிருக்கேனே...''
இருவரிடமும் எழுந்தது சிரிப்புச்சத்தம்.