sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

விண்ணப்பக் கணக்கில் 'தந்திரம்'; விழாவில் பறிபோன 'சுதந்திரம்'

/

விண்ணப்பக் கணக்கில் 'தந்திரம்'; விழாவில் பறிபோன 'சுதந்திரம்'

விண்ணப்பக் கணக்கில் 'தந்திரம்'; விழாவில் பறிபோன 'சுதந்திரம்'

விண்ணப்பக் கணக்கில் 'தந்திரம்'; விழாவில் பறிபோன 'சுதந்திரம்'


ADDED : ஆக 18, 2025 10:39 PM

Google News

ADDED : ஆக 18, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சி .பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாகப் போறாரு... நம்ம ஊருக்குப் பெருமைக்கா''

சொல்லியபடியே சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

''ஆமா மித்து... சி.பி.ஆர்., எப்பவுமே, எல்லாரையும் அரவணைச்சுப் போறவரு... தடாலடியா இல்லாம நிறுத்தி, நிதானமா சிந்திக்கிறவரு... பி.எம்., மோடி உள்பட பா.ஜ., மேலிடத்தினரை அவர் ஈர்த்ததுதான் இவ்ளோ பெரிய பொறுப்பு அவரை தேடி வந்ததுக்கு காரணம்...''

''நீங்க சொல்றது கரெக்ட்க்கா... திருப்பூருக்கு சி.எம்., வர முடியாம, உடுமலை விழாவுல கலந்துக்கிட்டாருல்ல... எதிர்க்கட்சிக்காரங்க, திருப்பூரை சி.எம்., தவிர்த்திட்டதா தொடர்ந்து விமர்சனம் பண்றாங்க...''

''மித்து... தி.மு.க., காரங்களே பலரும் அப்படித்தான் நினைக்கிறாங்க... உடுமலை விழாவுல, திருப்பூர் மாநகர குப்பைப் பிரச்னைக்குத் தீர்வு காண, 58 கோடி ரூபாய்ல சி.என்.ஜி., உற்பத்தி மையம் அமைப்பதற்கான திட்டத்தை காணொலில சி.எம்., துவக்கி வச்சிருக்காரு... ஆனா, இது பெரிசா ைஹலைட் ஆகல...''

''அக்கா... இன்னும் திட்டம் செயல்படுறதுக்கான இடம் எதுன்னு வெளிப்படையா அறிவிக்கவே இல்லையே...''

''இல்ல மித்து... இடத்தைச் சொன்னாதான், பிரச்னையை ஆரம்பிக்கிறதுக்குன்னே சில பேரு இருக்காங்களே... அதனால மாநகராட்சி அடக்கி வாசிக்குது...''

''அக்கா... சி.எம்.,மை எம்.பி., சுப்பராயன் மீட் பண்ணியிருக்காருல்ல...''

''மித்து... குப்பை விவகாரத்துல, மாநகராட்சி நிர்வாகத்தை திட்டவும் முடியாம, திட்டாம இருக்கவும் முடியாம எம்.பி., திணறிக்கிட்டு இருக்காரு...

''குப்பை பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண, சி.எம்.,மோட தனிப்பட்ட கவனம் நிச்சயம் தேவைப்படுது... சிட்டில ஆளும்கட்சியினருக்கும், தோழர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுதாம்...

''19வது வார்டுல குப்பை எடுப்பது தொடர்பா, தி.மு.க., கவுன்சிலரோட,தோழர் கட்சியைச் சேர்ந்த ஒருத்தருக்கும் கடும் வாக்குவாதம் நடந்துச்சாம். மேயர் குறித்தும் 'தோழர்' காரசாரமா பேசியிருக்காரு. ஒரு வழியா சமாதானம் பண்ணியிருக்காங்க... ஆனாலும் இந்த வீடியோ வைரலாயிடுச்சு...''

சித்ரா புன்னகைத்தாள்.

முயற்சி தோல்வி ''மித்து... மாநகராட்சியோட இடத்தை ஆக்கிரமிப்பு செஞ்சு, ஆளும்கட்சியினரோட தொழிற்சங்க கட்டடத்தை சமீபத்தில இடிச்சாங்கதானே...

''தொழிற்சங்கத்துக்காரங்க, ஆளும்கட்சி முக்கிய நிர்வாகிங்ககிட்ட கட்டடத்தை இடிக்காம இருக்க ஏதாச்சும் பண்ணுங்களேன்னு கடைசிவரைக்கும் முயற்சி பண்ணியிருக்காங்க...

''ஆனா, கோர்ட் உத்தரவு போட்டபின்பும் அகற்றாததால, கோர்ட் அவமதிப்பு வழக்கை அதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டியதா போச்சு... இதனால, ஆளும் கட்சி நிர்வாகிகள், இந்த விஷயத்துல ஒன்னும் பண்ண முடியாதுன்னு கைவிரிச்சிட்டாங்களாம்''

இளைஞர்களுக்கு குறி ''சித்ராக்கா... லிங்கேஸ்வரர் ஊர்ல ஜி.ெஹச்., எதிர்ல கொஞ்சம் தள்ளி ஒரு வீட்டுல பலான மேட்டர் நடக்குதாம். மொதல்ல போட்டோ அனுப்ப 300 ரூபாய், அப்புறம் 1500 ரூபாய், கடைசியா இன்னொரு 1500 ரூபா வசூல் பண்றாங்களாம். ஆன்லைன் மூலமா இளைஞர்களைக் குறிவச்சு 'பிசினஸ்' சக்கைப்போடு போடுதாம். போலீஸ்காரங்க கண்டுக்கிட்டதா தெரியல.

''இதே ஊர்ல இன்னொரு போலீஸ் மேட்டர் சொல்றேன்... விபத்துல சிக்குன ரெண்டு சொகுசுக்கார்களை, ஸ்டேஷன் முன்னாடியே நிறுத்திவச்சிருக்காங்க... வாகன நம்பர்களை தார்பாய் போட்டு மறைச்சிட்டாங்களாம்.

''வழக்கமா, ஸ்டேஷன் பின்னாடி இருக்கிற காலியிடத்துலதான் இந்த மாதிரி வாகனங்களை நிறுத்துறது வழக்கம். 'சாதாரண வண்டிலயே பார்ட்ஸ் எல்லாம் கழட்டிடறாங்களாம். சொகுசுக்கார்ல இருக்கிற விலை உயர்ந்த பார்ட்ைஸ கழட்டிட்டுப் போனா என்ன செய்றது'ன்னு ரொம்ப 'அக்கறை'யா போலீஸ்காரங்க பேசுறாங்களாம்''

''ஆமா மித்து... சாதாரண கேஸ்னா, வாகனங்கள் துருப்பிடிச்சு மண்ணோடு மண்ணா போனாலும் அக்கறை காட்டாத போலீசோட 'கடமை'யுணர்ச்சியை இப்ப புரிஞ்சுக்க முடியுது''

''அக்கா... அமராவதி ஆறு இருக்கிற 'தாரா' ஸ்டேஷன்ல எஸ்.ஐ.,யோட ரிலேஷன் ஒருத்தர், மீட்டர் வட்டிக்கு கடன் கொடுக்கிறார். இவருக்கு துணையா 'ஜெயிச்சுக் காட்டுற' எஸ்.ஐ., இருக்காரு... இதுல எஸ்.ஐ.,யும் பார்ட்னர்னு பேசிக்கிறாங்க... 'பழனிசாமி'யை கேட்டா விஷயம் தெரியும்''

''மித்து... இதையெல்லாம் மாவட்ட அதிகாரி கண்டுக்கிட்டாதானே நல்லது''

''சித்ராக்கா... அவிநாசில சுதந்திர தினத்தில, 'எப்.எல்., -2' பார்கள், தனியார் பார்கள் எல்லாம் சுதந்திரமா செயல்பட்டுச்சாம். போலீஸ் பக்கபலமாக இருந்திருப்பாங்க போல''

ஆதங்கத்தை வெளிக்காட்டினாள் மித்ரா.

''மித்து... சிட்டில காங்கயம் ரோட்டுல ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பா அறிவிப்பு வெளியிட்டிருந்தாங்க...

''அகற்றவில்லைன்னா 14ம் தேதி அவை அகற்றப்படும்ன்னு எச்சரிச்சிருந்தாங்களாம். சில வியாபாரிகள் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துனதும் இந்த நடவடிக்கையை அம்போன்னு கைவிட்டுட்டாங்களாம்''

''சித்ராக்கா... அரசு நிலம், நீர் வழிப்பாதைகள்ல, வீடு கட்டி வசிக்கிறவங்களுக்கு நகர்ப்புற வாரிய அடுக்கு மாடி குடியிருப்புல வீடு வழங்கியிருக்காங்க... இதில பலர், வேற இடத்தில வசிக்கிறாங்களாம். சிலர் ஆக்கிரமிப்பு இடத்தை காலி பண்ணாமலே, தங்களுக்கு ஒதுக்கின வீடுகளை வேறொரு குடும்பத்துக்கு வாடகைக்கு விட்ருக்காங்களாம். ஆய்வு நடத்துனா உண்மை தெரியும்.

''இன்னொரு சமாசாரம். 'நகர-வஞ்சி' குடியிருப்புல ஒரு வீட்டுல அறிவிப்புப்பலகை வச்சு, ஒருதரப்பினர் வழிபாடு நடத்துறாங்களாம். மத்தவங்க கேட்டா அவங்களை மிரட்டுறாங்களாம். புகார் தெரிவிச்சாலும், அதிகாரிகள் கண்டுக்கலையாம்''

மித்ரா விசனப்பட்டாள்.

இப்படியெல்லாம் கணக்கு ''மித்து... வாரந்தோறும் திங்கள்கிழமை, கலெக்டர் ஆபீஸ்ல குறைகேட்பு கூட்டம் நடக்குதுல்ல... இதுல, ஒவ்வொரு வாரமும் 300 முதல் 500 மனு வரைக்கும் பதிவாகுது.

''இந்த மனுக்கள்ல விரைவில் தீர்வு காணக்கூடிய மனுக்களைத் தேர்வு செஞ்சு, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்ல அளிக்கப்பட்டதா கணக்கு காட்றாங்களாம்.

''ஊத்துக்குளி, குளத்துப்பாளையத்தில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பா சமூக ஆர்வலர் ஒருத்தர், குறைகேட்பு கூட்டத்துல மனு கொடுத்திருக்காரு... ஆனா, இந்த மனுவை, ஊத்துக்குளியில நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அளிக்கப்பட்டதா கணக்குல சேர்த்துட்டாங்க போல...

''இதுதொடர்பா போன்ல கூப்பிட்ட அரசு அலுவலர்ட்ட, 'நான் குறைகேட்பு கூட்டத்துலதான் மனு அளிச்சேன்'னு சமூக ஆர்வலர் சொல்ல, 'அதனால் என்ன... தீர்வு கிடைக்குதான்னு பாருங்க'ன்னு அந்த அலுவலர் சொல்லியிருக்காராம்.

''சித்ராக்கா... விண்ணப்பக் கணக்கில் இப்படி ஒரு தந்திரமா...

''சிட்டில பலரும், ஆன்லைன்ல 'முதல்வரின் முகவரி' போர்ட்டல்ல புகார்களை பதிவு செய்றாங்க... மாநகராட்சி அலுவலர்களோ, இந்த மனுக்களைக் கண்டுக்கிடாம, ஏனோதானோன்னு பதில் அனுப்புறாங்களாம்.

''கிடப்பில் போட்ட மனுவையே 'அட்டாச்' செஞ்சு பதிலா அனுப்புறாங்களாம்...

''மனுதாரர் கேட்டா, ஒத்தை வார்த்தைல 'சாரி'ன்னு சொல்லி ஆபீசர்ஸ் 'எஸ்கேப்' ஆயிடறாங்களாம்''

மித்ரா அம்பலப்படுத்தினாள்.

விழா குளறுபடி ''மித்து... மாவட்ட நிர்வாகம் நடத்துற சுதந்திர தின விழா நிகழ்ச்சில கலந்துக்கக்கூட மக்கள் சுதந்திரமா வர முடியல...

''மெயின் கேட்ல இருந்து, உள்ளே போறதுக்கும், 'டூ வீலர்' நிறுத்துறதுக்கும், டிராபிக் போலீஸ் ரொம்பவே கெடுபிடி பண்ணிட்டாங்க...

''தியாகி வாரிசு ஒருத்தர் வந்த வாகனத்தைக்கூட தடுத்துட்டாங்களாம்.

''வழக்கமா, போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த பிறகு, நலத்திட்ட உதவிகள் கொடுப்பாங்க.

''இந்த முறை, போலீசுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்துட்டு, திடீர்னு நலத்திட்ட உதவிகள் கொடுத்துட்டாங்க. இதனால், அரசு ஊழியர்கள், ஒரு மணி நேரம் மைதானத்துல கால் கடுக்க நின்றுதான், பாராட்டு சான்றிதழ் வாங்க முடிஞ்சுது.

''பாராட்டு சான்றிதழ் கொடுத்துமுடிச்சு திரும்பி பார்க்கறப்ப, தியாகிகள் பகுதி காலியாகிருச்சு.

''உயர் போலீஸ் அதிகாரிங்க கொடிமேடையில் இருந்ததால, அவங்ககூட வந்த போலீசாரும், கூட்டமாக நின்னு அணிவகுப்பை மத்தவங்க பார்க்க முடியாதபடி மறைச்சுட்டாங்க.

''அடுத்த முறையாவது சரியா ஏற்பாடு பண்ணுவாங்களான்னு பார்ப்போம்... போலீசுக்கு சாப்பாடு சரியா ஏற்பாடு பண்ணலையாம்... 'டிபன்' விஷயத்துல கஞ்சத்தனமா நடந்துட்டாங்களாம்''

களைகட்டிய போட்டி ''சித்ராக்கா... அ.தி.மு.க.,வுல திடீர்னு 'சவுத்' தொகுதிக்குள்ள மாற்றம் வந்திருச்சாம். கோழிப்பண்ணை தொகுதி வி.ஐ.பி., அடுத்ததா 'சவுத்'ல நிக்கலாமான்னு ஆலோசனை கேட்கிறாராம். 'நார்த்'ல ஹாட்ரிக் அடிக்கலாம்னு வி.ஐ.பி., விடாபிடியா இருக்காராம்.

''மறைந்த 'மாஜி' எம்.எல்.ஏ.,வோட மனைவியும், போன வாரத்துல இருந்து, கட்சிக்காரங்க வீட்டு நிகழ்ச்சியில கலந்துக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். கவுன்சிலரா இருந்திருக்காங்க; வாரிசுகளும் மருத்துவ அணி நிர்வாகிகளா இருக்காங்க. அதனால், கட்சி வேலையில முழுசா இறங்கிட்டாங்களாம். 'சவுத்'ல 'சீட்' வாங்குறதுல போட்டி இப்பவே ஆரம்பிச்சிடுச்சு''

''மித்து... திருப்பூர் வளர்ச்சி ஆபீசரு, 'காளம்' கிராமத்துல, குப்பை பிரச்னைக்கு தனியா தீர்மானம் நிறைவேற்ற விடமாட்டேன்னு விடாப்பிடியா இருந்தாராம். 'கிராமசபா' குறித்த அதிகாரம் என்னன்னு தெரியாத நபரை வச்சு, எப்படித்தான் வளர்ச்சிப்பணிகளை செய்யப்போறாங்களோன்னு, ஆபீசரு 'சாமிவேலு'க்கு எதிரா போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருக்காங்களாம்''

''சித்ராக்கா... வேலம்பாளையத்துல அரசு மருத்துவமனை திறப்புவிழாவுல மினிஸ்டர் சுப்ரமணியன் கலந்துட்டார்ல.

''விழாவுக்காக பணிகளை மேற்கொண்ட துாய்மைப்பணியாளர் முதல் மாநகராட்சி ஊழியர் வரை ஒருத்தருக்கும் காலை முதல் மதியம் வரை உணவு வழங்கலையாம். பங்கேற்ற பொதுமக்களுக்கு டீ ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம். அதைக்கொடுத்தா எங்கே மக்கள் கிளம்பிடுவாங்களோன்னு

டீ, தண்ணீர் கொடுக்கறதையும் நிறுத்திட்டாங்களாம்.

''இதைக் கட்சிக்காரங்களும் கண்டுக்கலையாம். மினிஸ்டருக்கு இந்த விஷயம் எங்கே தெரிஞ்சிருக்கப்போகுது... சரிக்கா நாக்கெல்லாம் வறளுது... தண்ணீ கூட கொடுக்க மாட்டீங்க போல...''

''மித்து... கூலா பன்னீர் திராட்சை ஜூஸ் தர்றேன்... பத்தே செகண்ட் பொறுத்துக்கோ''

உரையாடல் முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us