தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ லஞ்சத்தை கொன்றுவிடு... இல்லாவிடில் நடவடிக்கைக்கு ஆளாகிவிடு!

 லஞ்சத்தை கொன்றுவிடு... இல்லாவிடில் நடவடிக்கைக்கு ஆளாகிவிடு!

 லஞ்சத்தை கொன்றுவிடு... இல்லாவிடில் நடவடிக்கைக்கு ஆளாகிவிடு!


ADDED : ஜூலை 14, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''என்னக்கா கேள்விப்பட்டீங்களா...? புது கவர்ன்மென்ட் வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பல இடங்கள்ல நடக்குது. நம்ம மாவட்டத்துல ஏற்கனவே, மூனு வி.ஏ.ஓ.க்கள் 'பொறி'யில சிக்கிட்டாங்கள்ல. இதப்பார்த்து பதறிப்போன ரெவின்யூ டிபார்ட்மென்ட்டை கண்காணிக்கிற பெரிய ஆபீசர், 'கூகுள் மீட்' போட்டு, ''எல்லாரும் உஷாரா இருங்க, யாரும் சிக்கிக்காதீங்க'ன்னு 'அலர்ட்' பண்ணியிருக்காரு,'' என, 'ஹாட் டாபிக்' உடன் ஆரம்பித்தாள் மித்ரா.

''லஞ்ச ஒழிப்பு ரெய்டுல இருந்து தப்பிக்க 'கூகுள் மீட்'ல கிளாஸ் எடுக்குறாங்கன்னு சொல்லு...'' சிரித்த சித்ரா, ''போன மாசம் நடந்த கூட்டத்துல அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளின்னு பல வட்டாரங்கள்ல பட்டா மற்றும் சில சான்றிதழ் சம்மந்தப்பட்ட அப்ளிகேஷன்களை அநியாயத்துக்கு நிராகரிச்சுட்டாங்க. இதப்பத்தி ஆபீசர்கள்கிட்ட விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பியிருக்காரு, பெரிய ஆபீசரு,''

''ஆனா, திடீர்னு வந்த டிரான்ஸ்பர் லிஸ்ட்ல, அப்ளிகேஷன் நிராகரிச்ச தாலுகா ஆபீசர்ஸ் மட்டும் அதே இடத்துல நீடிக்கிறாங்களாம். 'கவனிக்க வேண்டியவங்களை' கவனிச்சவங்க தப்பிச்சுட்டாங்கன்னு பேசிக்கிறாங்கக்கா,'' என்றாள்.

''மாசுக்கட்டுப்பாடு வாரியத்துலயும் இதே கதைதான் மித்து. இண்ட்ஸ்ட்ரி லைசென்ஸ் புதுப்பிக்கவும், இன்ஸ்பெக் ஷன் வர்றப்பவும் ஆபீசர்ங்க அநியாயத்துக்கு பணம் எதிர்பார்க்றாங்களாம். சமீபத்துல, இண்டஸ்ரிக்காரங்க ஒன்னு சேர்ந்து, எம்.எல்.ஏ., மினிஸ்டருக்கு நடத்திய பாராட்டு விழா மேடையிலயே, அவங்க காதுல இந்த கமிஷன் 'அட்ராசிட்டி'யை பத்த வச்சிட்டாங்களாம். சென்னைல இருக்கிற பெரிய ஆபீசர்ஸ், 'டார்கெட் பிக்ஸ் பண்ணி வசூல்' பண்றாங்கன்னும் அவங்க சொல்லியிருக்கிறதா தகவல்...'' ரகசியம் உடைத்தாள் சித்ரா.

சபாஷ்... ஆபீசர்! ''உள்ளூர் திட்டக்குழுமத்துல 'சைட் அப்ரூவல்' வாங்கப் போனாலே லஞ்சமா பெரிய தொகை கொடுக்க வேண்டியிருக்காம். அதுலயும் இப்பெல்லாம், 'அப்ரூவல்' வேணும்னா, 'கணக்கம்பாளையத்துல இருக்கற தி.மு.க. பிரமுகரை போய் பாருங்க, சென்னை வரைக்கும் பேசி முடிச்சு கொடுத்துடுவாரு'ன்னு சில ஆபீசர்களே கை காட்ற அளவுக்கு ஒருத்தரோட ஆதிக்கம் இருக்காம்,'' என்றாள் மித்ரா.

''இப்டி பண்ணா எப்படி லஞ்சம் குறையும். அதவிட இன்னொரு கூத்தும் சொல்றேன் கேளுடி...,'' என சித்ரா தொடர்ந்தாள். ''அவங்க செய்ற வேலைக்கு, அவங்களேதான் 'ஆடிட்'டும் செஞ்சுக்கிற மாதிரியான ஆபீசர்ஸ் தான், இப்போ பஞ்சாயத்து நிர்வாகத்தை கவனிச்சிக்றாங்க. 'ஆடிட்ல கை வச்சுடுவோம்'னு மிரட்டியே வசூல் அள்றாங்களாம். மாசத்துக்கு ஒருமுறை ஆய்வுக்கு போனா போதுமாம்.''

''ஆனா, நாலு தடவைக்கு மேல போறாங்களாம். ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும், 30 ஆயிரம் ரூபாய் வரை பிக்ஸ் பண்ணி கல்லா கட்றாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது. ஆனா, புதுசா வந்திருக்கிற மாவட்ட பஞ்சாயத்துகளை கவனிக்கிற பெரிய ஆபீசர்க்கு, 'லஞ்சம்'ங்கிற வார்த்தையே பிடிக்கிறது இல்லையாம். அதை 'பிச்சை'னுதான் சொல்றாராம். 'பிச்சை எடுக்கிறதும் தப்பு; வாங்கறதும் தப்பு, ஆதாரத்தோடு சிக்கினா கடும் நடவடிக்கை எடுப்பது உறுதின்னு சொல்லிட்டாராம்,'' என்றாள்.

நங்கூரமிட்ட போலீஸ் ''அதேபோல, மாவட்ட போலீசை கவனிக்கிற புதுசா வந்திருக்கற பெரிய ஆபீசரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்களாம். கஞ்சா, குட்காவை ஒழிக்கணும்னு வாரத்துக்கு ஒரு நாள் 'ஸ்பெஷல் டிரைவ்' போக உத்தரவிட்டிருக்காங்க. ஆனா, யார் அக்யூஸ்ட்னு தெரியாம, ஏதோ ஒரு ஏரியாவுக்கு போயி, சம்பந்தமே இல்லாதவங்ககிட்ட விசாரிச்சு ஒரு போட்டோ எடுத்துட்டு வந்துடுறாங்களாம். 'லிஸ்ட்ல இருக்குற இடத்துக்குப் போயிட்டோம்'ன்னு பெரிய ஆபீசருக்கு காட்ட ஒரு 'அட்ரஸ் லிஸ்ட்'டை வச்சுக்கிட்டு, கடமைக்கு போட்டோ ஷூட் எடுத்துட்டு கிளம்பிடறாங்களாம்,''

''மூனு வருஷத்துக்கு மேல ஒரே ஸ்டேஷன்ல வேல பார்க்குற போலீஸ்காரங்க துவங்கி எஸ்.எஸ்.ஐ., வரை டிரான்ஸ்பர் லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்காங்களாம். இதுல என்ன ஒரு கொடுமைன்னா, போன தடவை 'டிரான்ஸ்பர் ஆர்டர்' வாங்கின பல ஆபீசர்ஸ் இன்னும் பழைய ஸ்டேஷன்லயே தான் இருக்காங்களாம். மேலதிகாரிகளோட உத்தரவோ, எக்ஸ்டென்ஷன் ஆர்டரோ எதுவுமே இல்லாம, சொந்த செல்வாக்கை வச்சுக்கிட்டே காலம் தள்றதா பேசிக்கிறாங்க. இதயும் புது ஆபீசர் கவனிச்சாங்கன்னா பரவாயில்ல,'' என்றாள் சித்ரா.

''அதுமட்டுமில்ல மித்து. லாஸ்ட் வீக் தாராபுரம் ரோட்ல '108' ஆம்புலன்ஸ், மின்கம்பத்துல மோதிச்சுல்ல. போலீஸ் வர்றதுக்குள்ள, வண்டியோட நம்பர் பிளேட்டை பேப்பர் ஒட்டி மறச்சுட்டாங்க. பொது சொத்தான மின்கம்பமே அடி வாங்கியிருக்கறப்போ வீரபாண்டி போலீஸ் 'புகார் எதுவும் வரல'ன்னு கேஸ் போடாம நழுவிட்டாங்க. ஆம்புலன்ஸ் அதிகாரிகளோ, 'வண்டியில நோயாளி யாரும் இல்ல; டிரைவர், டெக்னீசியனுக்கும் ஒன்னும் ஆகல... அதனால இத பெருசு பண்ண வேண்டாம்'னு அசால்ட்டா சொல்லிட்டுப் போயிட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.

ஒற்றர் படை 'செம வீக்' ''தாராபுரத்துல கவர்மென்ட் ஸ்கூல்ல வினாத்தாள் வச்சிருந்த 'ஸ்ட்ராங் ரூம்' பாதுகாப்புல இருந்த லேடி கான்ஸ்டபில் ஒருத்தரு, 'சிசிடிவி' கேமராவை பேப்பர் வச்சு மறைச்சுட்டாரு. இந்த விவகாரம் மறுநாள் கல்வித்துறைக்கு தெரிஞ்சு, போலீஸ்ல சொல்லியும் நடவடிக்கை எடுக்க ரொம்ப தயங்கியிருக்காங்க. வழக்கமா இந்த மாதிரி விவகாரங்கள்ல சஸ்பெண்ட் பண்ணிட்டுதான் விசாரிப்பாங்க, ஆனா, அவரை டிரான்ஸ்பர் பண்ணிட்டு விசாரிக்கிறாங்க,''

'அதே ஊர் ஸ்டேஷனுக்கு சமீபத்துல வந்த ஒற்றர் படை போலீஸ் ஒருத்தர் பெயருக்குத்தான் வேலை பார்க்குறாரு. 'சிசிடிவி' கேமராவை மறைச்ச விஷயம் கூட இவருக்கு லேட்டா தான் தெரிஞ்சிருக்கு. ஸ்டேஷனுக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்குதுன்னு முன்கூட்டியே சொல்ல வேண்டியவரே இப்படி இருந்தா என்ன பண்றது?'' என அங்கலாய்த்தாள் சித்ரா, தொடர்ந்து பல்லடம் மேட்டருக்கு தாவினாள்.

உச்சம் தொட்ட கோஷ்டி பூசல் ''பல்லடம் பக்கம் அம்மாபாளையத்துல கரெக்டான டாக்குமென்ட் இல்லாம, ரெவின்யூ ஆபீசர்ஸ் சரியா விசாரிக்காம விவசாயத்துக்கு குழாயில தண்ணி எடுக்க 'அப்ரூவல்' கொடுத்துட்டாங்க. இப்போ மக்கள் போராட்டத்தால என்ன பண்றதுன்னு தெரியாம ஆபீசர்ஸ் முழிக்கிறாங்களாம். நீ சொல்றதை பார்த்தா, அந்த 'கரை' பஞ்சாயத்துல, வரிப்பணத்தை 'ஜி-பே'ல வாங்குன முறைகேடு புகாரையும் யூனியன் அதிகாரி விசாரிக்காம பத்திரமா லாக்கர்ல பூட்டி வச்ச கதையாத்தான் இதுவும் இருக்கும் போல...'' என சித்ரா சிரித்தாள்.

அடுத்து அரசியல் மேட்டருக்கு தாவிய மித்ரா,''டி.வி.கே.வுல எத்தனை தொகுதிகள் இருக்கோ, அத்தனைக்கும் தனித்தனியா தொகுதி செயலாளர் நியமிச்சு மன்த்லி ரிப்போர்ட் கேட்கப் போறதா சி.எம்., சொல்லியிருக்காருல்ல. இதுல, 'லிங்கேஸ்வரர்' தொகுதிக்குள்ள பெரிய உள்கட்சி பூசலே வெடிச்சிருக்குக்கா. இப்ப இருக்கற சிட்டிங் வி.ஐ.பி. இந்த பதவிக்கு குறி வச்சு காய் நகர்த்துறாங்களாம். இதுக்காக, தன்னோட 'டாடி'கிட்ட சொல்லி மேலிடத்துக்கு 'பிரஷர்' போயிட்டே இருக்காம். மத்த கட்சி போலவே டி.வி.கே.வும் மாறிட்டு வருது,'' என்று சொல்லி முடித்ததும், ஆவி பறக்க பில்டர் காபி கொண்டு வந்தாள் சித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us