sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

அ.தி.மு.க.,வினர் 'மாயம்' ; தி.மு.க.,வினர் 'காயம்'

/

அ.தி.மு.க.,வினர் 'மாயம்' ; தி.மு.க.,வினர் 'காயம்'

அ.தி.மு.க.,வினர் 'மாயம்' ; தி.மு.க.,வினர் 'காயம்'

அ.தி.மு.க.,வினர் 'மாயம்' ; தி.மு.க.,வினர் 'காயம்'


ADDED : ஏப் 22, 2024 11:25 PM

Google News

ADDED : ஏப் 22, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''திருப்பூர்ல அ.தி.மு.க., - பா.ஜ., - இந்திய கம்யூனிஸ்ட்ன்னு மூணு வேட்பாளருமே, நாங்கதான் ஜெயிப்போம்னு சொல்றாங்களாமே''

கேள்வியைத் தொடுத்தவாறு சித்ரா, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள்.

''வாங்கக்கா... அவங்க அப்படிச் சொல்லலேன்னா தான் ஆச்சர்யம். கள நிலவரம் ரொம்பக் கடுமையா இருந்ததா சொல்றாங்க... ஜூன் 4 அன்னிக்குத் தெரிஞ்சிடப்போகுது''

''மித்து... எல்.ஆர்.ஜி., காலேஜ்லதான் ஓட்டு எண்றாங்க... ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் ஓட்டு மெஷின்களை 'ஸ்ட்ராங் ரூம்'ல, கலெக்டர், பார்வையாளர் முன்னிலைல சீல் வச்சாங்க...

''இந்திய கம்யூ., - பா.ஜ., நிர்வாகிங்க லோக்கல்ல இருந்து வந்திருக்காங்க... அ.தி.மு.க.,வுல லோக்கல் நிர்வாகிங்க ஒருத்தருமே வரலையாம்... பெருந்துறையைச் சேர்ந்த ஒருத்தரு வந்திருக்காரு... அவரும் பெயரளவுக்குத்தானாம்''

''சித்ராக்கா... எதுனாலும் லோக்கல்ல இருக்கிற அ.தி.மு.க., காரங்கதானே முன்னாடி நிப்பாங்க... அன்னிக்கு மாயமாயிட்டாங்கன்னா ஆச்சர்யமாத்தான் இருக்கு... முழுசா தேர்தல் கமிஷனை நம்பறாங்க போல...''

தோழர் 'சென்டிமென்ட்'


''மித்து... இந்திய கம்யூ., தலைமை முகவர் ரவி, 'சிபிஐ'ன்னு கட்சியோட பெயரை முத்திரையா எடுத்துவந்து ஒவ்வொரு கதவிலும் 'சீல்' பதிச்சாராம். 'போன தேர்தல்ல இப்படித்தான் செஞ்சோம்; ஜெயிச்சோம்'னு சொன்னாராம்.

''தோழரோட 'சென்டிமென்ட்' ஒர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம்''

''சித்ராக்கா... ஸ்ட்ராங் ரூம் உள்ள போய், கட்சிக்காரங்க ஓட்டு மெஷின்க ளையெல்லாம் பார்த்த பின்னாடிதான் 'சீல்' வச்சாங்க... ஆனா, போட்டோ, வீடியோ எடுக்க பத்திரிகையாளருக்கு அனுமதியில்லைன்னு சொல்லீட்டாங்களாம்''

''இதுதான் வெளிப் படைத்தன்மை போல... எவ்வளவோ அறை இருந்தும், வேட்பாளர் பிரதிநிதிகளுக்கு அங்கு தகர ெஷட் மாதிரி, ஜன்னல் இல்லாத அறைலதான் தங்க வச்சிருக்காங்களாமே...''

பாம்பு பீதி


''ஆமாக்கா... வழக்கமா ஓட்டு எண்ணுற மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடற போலீஸ்காரங்க, மூணு சுழற்சி முறைல பணியில ஈடுபடுத்தப்படுவாங்களாம். இந்த முறை ரெண்டு சுழற்சிதானாம். இதனால ரெஸ்ட் கிடைக்கலன்னு புலம்பறாங்களாம்''

''சரிதான் மித்து... அங்க பல இடங்கள்ல புதர் மண்டிக்கிடக்குதாம். பாம்புகள் நடமாட்டம் நிறைய இருக்காம். போன தடவை ஒரு பாம்பு படம் எடுத்தாடுச்சுன்னு 'நியூஸ்' எல்லாம் வந்துச்சே... ஞாபகம் இருக்கா... இந்த முறை என்ன நடக்குதோன்னு திக்...திக்னு போலீசார் கதிகலங்கிப்போயிருக்காங்க''

மித்ராவின் முகத்திலும் பீதி தெரிந்தது.

பணம் இறைப்பு


''சித்ராக்கா... ரோட்டுல 'தில்' காட்டுற பறக்கும் படை, வீதிப்பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்த்திருக்கலாம்... தி.மு.க., காரங்க நகர்ப்புறத்துல ஒரு ஓட்டுக்கு 500 ரூபா; அ.தி.மு.க., காரங்க கிராமம் - நகரத்துல 250 ரூபான்னு அள்ளிவீசியிருக்காங்க. மங்கலத்துல ரம்ஜான் அன்னிக்கு பா.ஜ., காரங்க, அபிமானிங்களுக்கு வீடு வீடா சிக்கன் பிரியாணி பார்சல் கொடுத்தாங்களாம்...

''பல்லடத்துல பல பேருக்குப் பணம் கொடுக்காம விட்டுப்போச்சாம்... எங்க சின்னத்துக்குப் பார்த்து போட்ருங்க... தேர்தல் முடிஞ்சதும் கட்டாயம் பணம் தந்தர்றோம்னு சத்தியமே பண்ணியிருக்காங்களாம்''

''அட... கடவுளே... பணம் கொடுக்கறவங்கள வாக்காளரா விரட்டியடிச்சாதான் இதெல்லாம் முடிவுக்கு வரும், மித்து''

''சரியா சொன்னீங்கக்கா... லோக்சபா தேர்தல்ல எந்த மாவட்டத்துல ஓட்டு குறைஞ்சாலும், வெற்றி பாதிக்கப்பட்டாலும் மாவட்ட செயலாளர், அமைச்சர்கள் பதவி பறிக்கப்படும்னு தி.மு.க., தலைவரு எச்சரிச்சிருக்காருல்ல...

''டாலர் சிட்டி நிர்வாகி பெரிய தொகையை இறக்கினாராம். ஓட்டு குறைஞ்சா, முதல் கட்டமா கீழ் மட்டத்தில இருந்துதான் பதவியைப் பறிப்பாங்க... எனக்கு கடைசில தான் பிரச்னை வரும். பணத்தை இறைச்சுட்டேன். பார்த்து நடந்துக்குங்கன்னு லோக்கல் நிர்வாகிங்ககிட்ட சொன்னாராம்.

''என்னதான் சொன்னாலும் மக்கள் ஓட்டு போடறவங்களுக்குத்தான் போடுவாங்க... ஓட்டு குறைஞ்சா இவர் மேலதான் நடவடிக்கை எடுப்பாங்க... நம்மைப் போட்டு ஏன் பயமுறுத்தறாரு... கட்சிக்காக உழைக்கறவங்களையும் 'காயப்படுத்தற' மாதிரில்ல இருக்கு இந்த மிரட்டல்னு லோக்கல் நிர்வாகிங்க கலாய்ச்சாங்களாம்''

சித்ரா ஆர்வத்துடன் கேட்டாள்.

''சித்ராக்கா... ஓட்டுப் பதிவு அன்னிக்கு, தெலுங்கானா ஊர்க்காவல் படையினரும் ஓட்டுச்சாவடில பாதுகாப்புப்பணில இருந்தாங்க... மதிய நேரத்தில நம்ம ஊரு போலீசுக்காரங்க மரத்தடியிலயும், மறைவா இருக்கற இடத்திலயும் 'ரெஸ்ட்' எடுத்தாங்களாம். தெலுங்கானா ஊர்க்காவல் படையினர் 'சின்சியரா' வேலை பார்த்தாங்களாம்''

''மித்து... தேர்தல் பணி கடுமையா இருந்துச்சு... பாவம்... போலீசார் கண் அசந்தா தப்பா''

சித்ராவிடம் இரக்கம் மேலிட்டது.

மாஜி 'தில்'


''சித்ராக்கா... செல்லப்பபுரம் பள்ளில ஒரு வாலிபரோட ஓட்டு நீக்கப்பட்டதா சொல்லி பிரச்னை செஞ்சாங்க... அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., குணசேகரனும் வந்து 'இந்த ஓட்டு எங்களுக்கு வர வேண்டியது; ஒரு ஓட்டுல தோத்தா, நாங்க ஜெயிச்சதா நீங்க அறிவிக்க முடியுமா'ன்னு அதிகாரிகளைப் பார்த்து 'தாட்பூட்'னு குதிச்சிருக்காரு...

''இதைப் பார்த்த தி.மு.க., நிர்வாகி ஒருத்தர், பூத் ஏஜென்ட்டுக்கு பணம் கொடுத்தீங்கன்னா மட்டும் போதாது. வாக்காளர் பட்டியல்ல பேரு இருக்கான்னு பார்க்கணும்... அந்த ஏரியா பூத் ஏஜென்டை கேள்வி கேட்காம, இங்கு வந்து குதிச்சா நிலைமை சரியாயிருமான்னு கமென்ட் அடிச்சாராம்''

சித்ரா புன்னகை பூத்தாள்.

''மித்து... தாமரைக்கட்சி மாநிலத் தலைவர் மங்கலத்தில பிரசாரம் செஞ்சாரு. பிரசாரத்துக்கு வர்றதுக்கு முன்னாடி கட்சித் தொண்டர்கள், ரெண்டு தடவை சரவெடி வெடிச்சாங்களாம். நிர்வாகி ஒருத்தரு, 'பட்டாசு வெடிச்சா அஞ்சாயிரம் ரூபான்னு கணக்குல எழுதிடறாங்க தெரியுமா'ன்னு பதறிப்போய்ச் சொன்னாராம்''

''அவரு பதறுனது சரிதான் சித்ராக்கா... கடைசில வேட்பாளர்கள்தான சிக்கல்ல மாட்டிக்குவாங்க...

''முந்தைய நாள் ராத்திரி, அப்புறம் ஓட்டுப்பதிவு நாள்ல மூணு வேளை உணவு கிடைக்காம, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சிரமப்பட்டிருக்காங்க அக்கா. பூத் ஏஜென்ட்கள்தான் உணவு வாங்கித்தந்தாங்களாம்''

விரட்டியடிப்பு


''மித்து... இதுதானே ஒவ்வொரு தடவையும் நடக்குது... திருப்பூர்ல ஓட்டுச்சாவடி பக்கத்துலயே ஆளும்கட்சி நிர்வாகி கட்டுக்கட்டா பணத்தை வச்சுக்கிட்டு, பூத் சிலிப்போட பணத்தை வினியோகிச்ச வீடியோ வைரலாச்சு... ஆனா, அந்த நிர்வாகி மேல எந்த நடவடிக்கையும் இல்ல...

''சிட்டில ராய'புரி' ஏரியால இருக்கிற ஆளும்கட்சி கவுன்சிலர் 'கரன்' தன்னோட ஆதரவாளர்களோட, ஓட்டளிக்க வந்தவங்க கிட்ட பிரசாரம் பண்ணுனாராம். வாலிபர் ஒருத்தர், நீங்க ஜெயிச்சபின்னாடி என்ன செஞ்சீங்கன்னு கேட்ருக்கார். டென்ஷனான கவுன்சிலர், வாலிபரை ஏரியாவுல விரட்டி விரட்டி அடிச்சாராம். வாலிபர் புகார் கொடுத்தாலும் கமுக்கமா பிரச்னையை போலீசார் முடிச்சிட்டாங்க...''

ஒருமைப்பேச்சு


''சித்ராக்கா... லிங்கேஸ்வரர் ஊர்ல ஓட்டுப்பதிவு அன்னிக்கு, 'உயரமான' உயரதிகாரி ஒருத்தரு ஓட்டு போட வந்த மக்கள் கிட்ட ஒருமைல பேசுனாராம். மக்கள் முகம் சுளிச்சிருக்காங்க... 'சன்ஜான்' எப்பவுமே அப் படித்தானாம்...

''மக்கள் காசுலதான் சம்பளம் வாங்கறோம்னு நெனச்சாருன்னா நாவடக்கத்தோட இருந்திருப்பாரு அந்த அதிகாரி''

''மித்து... அரசியல் தான இப்ப 'டாப் டாபிக்'... மத்த மேட்டர்லாம் அப்புறம் பேசலாம்... சரி... யாருக்கு நீ ஓட்டுப்போட்ட''

''அக்கா... அது ரகசியம்... ஆனா ஒண்ணு சொல்றேன்... நீங்க போட்ட, அதே ஜெயிக்கப்போற வேட்பாளருக்குத்தான் போட்டேன்''

''அடி... பாவி' என்று மித்ராவைச் செல்லமாக அடிக்கப்பாய்ந்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us