/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
உடன்பிறப்புகள் செய்றாங்க தில்லாலங்கடி
/
உடன்பிறப்புகள் செய்றாங்க தில்லாலங்கடி
ADDED : ஜூலை 28, 2025 09:56 PM

உ க்கடம் பகுதியில் நடந்த ஆளுங்கட்சி பொதுக்கூட்ட நிகழ்வு முடிந்ததும் சித்ராவும், மித்ராவும் அருகில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.
பிரியாணி, சிந்தாமணி சிக்கன் ஆர்டர் கொடுத்த மித்ரா, ''அசெம்ப்ளி எலக்சன் வேலை எப்படி போயிட்டு இருக்கு. ஆளுங்கட்சிக்காரங்க தடபுடலா நலத்திட்ட உதவி வழங்கிட்டு இருக்காங்களே...'' என ஆரம்பித்தாள்.
''நம்ம டிஸ்ட்ரிக்டுல, 10க்கு 10 அள்ளிக் காட்டுவோம்னு, மேற்கு மண்டல பொறுப்பாளரான செந்தில்பாலாஜி சபதம் போட்டிருக்காரு. அதுக்கான வேலையில ஆளுங்கட்சிக்காரங்களை இறக்கி விட்டிருக்காரு. 'சீட்' கேக்கறவங்களும் தொகுதிக்குள்ள, சின்ன சின்ன வேலைகளை செஞ்சுட்டு இருக்காங்க,''
''சீமான் கட்சியில இருந்து வந்தவரு, 'ஸ்டேட்' பொறுப்புல இருக்காரு; அவருக்கு கண்டிப்பா 'சீட்' கெடைக்கும்னு, உடன்பிறப்புகளுக்கு மத்தியில் 'டாக்' ஓடுது; அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்களாம். தெற்கு தொகுதியை கொடுப்பாங்களோன்னு நெனைக்கிறாங்க. ஏன்னா... இ.பி.எஸ்.,,க்கு எதிரா ஒரு கூட்டம் நடத்தி, கெத்துக்காட்டுனாரு; இப்போ, ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கியிருக்காரு... ''
டாக்டரின் தம்பட்டம்! ''தெற்கு தொகுதிக்கு கமல் கட்சியில இருந்து, தாவி வந்த 'டாக்டர்' இருக்காரேப்பா...''
''கட்சிக்குள்ள அவரு அலம்பல் தாங்க முடியலைன்னு, வார்டு செயலாளர்கள் புலம்புறாங்க. ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கி, கட்சிக்காரங்களை அங்க வரச் சொல்றாராம். 'ஓரணியில் தமிழ்நாடு'ங்கிற செயலியை உருவாக்குனதே அவரு தானாம்; சென்னையில இதுக்குன்னே ஒரு ஆபீஸ் போட்டு, 'ஒர்க்' பண்ணிட்டு இருக்கறதா, உடன்பிறப்புகள்ட்ட தம்பட்டம் அடிச்சிட்டு இருக்காராம்... அப்புறம், அவரு சொல்றதை மட்டுமே கேக்கணும்னு, பூத் லெவல் ஏஜன்ட்டுகளை பாடாய்படுத்துறாராம். தொகுதி ஒதுக்குன மாதிரி, ஏகத்துக்கும் நெருக்கடி கொடுக்குறதா சொல்றாங்க,''
உடன்பிறப்புகளின் தில்லாலங்கடி ''அதெல்லாம் இருக்கட்டும். ஓரணியில் தமிழ்நாடுன்னு சொல்லிட்டு, ஆளுங்கட்சிக்காரங்க வீடு வீடா போனாங்களே... யாராச்சும் உறுப்பினரா சேர்றாங்களா....''
''அதுவா... எலக்சனுக்கு முன்னாடி, கட்சிக்காரங்களுக்கும் மக்களுக்கும் நெருக்கம் ஏற்படுத்துறதுக்காக, இந்த ஏற்பாடு செஞ்சாங்களாம். வீட்டுக்கு போயி பேசி, போன் நம்பர் வாங்குறதுனால தொடர்பு வந்துரும்னு தலைமை நெனைச்சிருக்கு. இதுல, ஏ.டி.எம்.கே.,காரங்க வீட்டுக்கு மட்டும் போறதை தவிர்க்குறாங்க. மத்த கட்சிக்காரங்க வீட்டுக்கு தைரியமா போறாங்க; உரிமைத்தொகை கெடைக்கும்ங்கிற ஆசையில லேடீஸ் பலரும் பேர் கொடுக்குறாங்க. விருப்பப்படுறவங்கள மட்டும் சேர்க்கணும்; கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க,''
''ஆனா... நம்மூர்ல சில இடங்கள்ல தலைகீழா நடந்துச்சாமே... தலைமையில இருந்து கூப்பிட்டு, 'டோஸ்' விட்டதா, உடன்பிறப்புகள் பேசிக்கிட்டாங்களே...''
''ஆமாப்பா... அந்த கூத்து பெருங்கூத்தா போயிடுச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வாக்காளர் பட்டியலை வச்சு, ஏற்கனவே 'டோர் டூ டோர்' போயி, 'யெல்லோ புக்' தயார் செஞ்சிருந்தாங்க. அதுல, வாக்காளர்கள் பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டுன்னு அவுங்கள பத்திய எல்லா தகவலையும் சேகரிச்சாங்க. ஒவ்வொரு வாக்காளனின் ஜாதகமும், ஆளுங்கட்சி கைவசம் இருக்குது...' '
''அதனால, கார்ப்பரேஷன் ஏரியாவுக்குள்ள இருக்கற, சில பூத்துல வேலை செய்றவங்க... வீடு வீடா போகாம, 'யெல்லோ புக்'குல இருந்த மொபைல் போன்களை எடுத்து, உறுப்பினர் சேர்க்கை நடத்தி இருக்காங்க. சில பூத்கள்ல, 80 சதவீதம் 'கணக்கு' காட்டுனதுனால, தலைமை அதிர்ச்சி ஆகிருச்சு. பட்டியல்ல இருக்கற, 15 சதவீத முகவரியில வாக்காளர்களே இருக்கறதில்லை; எப்படி, 80 சதவீதம் உறுப்பினர் சேர்க்கை நடத்தியிருக்க முடியும். அந்த ஏரியாவுல எதிர்க்கட்சிக்காரங்களே இல்லையான்னு, கேள்வி எழுப்பியிருக்காங்க...''
''என்கொயரியில, தில்லாலங்கடி வேலை செஞ்சது வெளிச்சத்துக்கு வந்திருக்கு. தலைமையில இருந்து 'செம டோஸ்' விட்டுருக்காங்க. உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பத்துல இருந்து, மறுபடியும் ஆரம்பிக்கச் சொல்லியிருக்காங்க. ஒவ்வொரு குடும்பத்திலும் கண்டிப்பா ரெண்டு மொபைல் நம்பர் வேணும்னு, கறாரா சொல்லிட்டாங்களாம்...''
கமல் கட்சிக்கு ஆசை ''கமல் கட்சிக்காரங்களும், கம்யூ., கட்சிக்காரங்களும் தொகுதி கேட்கறதா சொல்றாங்களே.... உண்மையா...''
''2021 எலக்சன்ல கமல் கட்சிக்காரங்க, ஒவ்வொரு தொகுதியிலயும் கணிசமா ஓட்டு வாங்குனாங்க; கமல் களமிறங்குன தெற்குல, கடைசி நேரத்துல வெற்றி வாய்ப்பு நழுவிப் போச்சு. 2026ல கூட்டணி பலத்தோட போட்டி போட்டா, எப்படியும் ஜெயிச்சிடலாம்னு நெனைக்கிறாங்க. தெற்கு, வடக்குல ஏதாச்சும் ஒன்னை கேக்குறதுக்கு ஆசைப்படுறாங்க. அவுங்க கட்சியில மாநில நிர்வாகியா இருக்கற, 'தங்க'மானவருக்கு 'சீட்' வாங்குறதுக்கு 'மூவ்' பண்றாங்க...''
''கம்யூ., கட்சிக்காரங்களுக்கு போன எலக்சன்ல தொகுதி ஒதுக்கலை. லோக்சபா எலக்சன்ல 'சிட்டிங்' தொகுதியை ஆளுங்கட்சிக்கு விட்டுக் கொடுத்தாங்க. அதனால, 2026 தேர்தல்ல கண்டிப்பா ஒரு தொகுதிய கேட்டு வாங்கணும்னு, கம்யூ., கட்சி நிர்வாகிங்க பேசிட்டு இருக்காங்க. இதே மாதிரி, கதர் சட்டைக்காரங்களும் தொகுதி கேட்பாங்க போலிருக்கு. 10ல மூனு, கூட்டணி கட்சிகளுக்கு போறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. அதுல, வால்பாறைய கைப்பத்துறதுக்கு, போட்டி பலமா இருக்குன்னு சொல்றாங்க...'' என்றபடி, டேபிளுக்கு வந்த பிரியாணியை ருசிக்க ஆரம்பித்தாள் சித்ரா.
''அ.தி.மு.க., நிலவரத்தை சொல்லவே இல்லையே...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.
''அவுங்களும் ஆளுங்கட்சிக்கு ஈக்குவலா, களத்துல வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஜெ., பேரவைய சேர்ந்தவங்க, வீதி வீதியா போயி, திண்ணை பிரசாரம் செய்றாங்க. ஏ.டி.எம்.கே., ஆட்சியில செயல்படுத்துன தாலிக்குத் தங்கம், இலவச லேப்-டாப், ஸ்கூட்டர் மானியம்னு திட்டங்களை இப்போ நிறுத்தி வச்சிருக்காங்கன்னு சொல்றாங்க... அதெல்லாம் லேடீஸ் மத்தியில எடுபடுதாம்.''
''மாஜியின் 'ராஜா' வான உறவுக்காரர் ஒருத்தரு, கிணத்துக்கடவை எதிர்பார்க்குறாரு. தாமரை கட்சியைச் சேர்ந்த 'வசந்தமானவரும்' தொகுதிக்கு ஆசைப்படுறாரு. அதனால, சிட்டிங் எம்.எல்.ஏ.,வுக்கு 'சீட்' கெடைக்குறதுக்கு வாய்ப்பில்லை; அப்படியே கொடுத்தாலும் பொள்ளாச்சிக்கு அனுப்பிடுவாங்கன்னு ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க...''
'டிரான்ஸ்பர்' மர்மம் ''கிணத்துக்கடவுன்னு சொன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. மைன்ஸ் டிபார்ட்மென்ட் ஆபீசரை, திடுதிப்புன்னு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்களே... என்னவாம்...''
''அதுவா... கிணத்துக்கடவுக்கு பக்கத்துல சொக்கனுார்ல குவாரி இருக்குது; விவசாயிகள் கம்ப்ளைன்ட் பண்ணனதுனால, மைன்ஸ் டிபார்ட்மென்ட்டுக்காரங்க நேர்ல ஆய்வு செஞ்சாங்க.பொள்ளாச்சி சப்-கலெக்டர் லிமிட்டுக்குள்ள, அந்த ஏரியா வர்றதுனால பைல் அவர்ட்ட போயிருக்கு; 4.48 கோடி ரூபா 'பைன்' போட்டு, தாளிச்சிட்டாரு. குவாரிக்காரங்க கலெக்டர்கிட்ட முறையீடு செஞ்சதும் பைன் தொகையில, ஒரு கோடி ரூபாயை குறைச்சிருக்காங்க,''