sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ 'அந்த மனசுதான் சார் கடவுள்!': பள்ளி மாணவர்களின் 'சிக்கு'

 'அந்த மனசுதான் சார் கடவுள்!': பள்ளி மாணவர்களின் 'சிக்கு'

 'அந்த மனசுதான் சார் கடவுள்!': பள்ளி மாணவர்களின் 'சிக்கு'


ADDED : பிப் 14, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 05:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை, தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் அத்வைத் மற்றும் அம்ரிதா கூறியதாவது:

எங்கள் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பிற்கு, சமூக செயல்பாடுகள் குறித்த புராஜெக்ட் சமர்பிக்க வேண்டும். முதல் வகுப்பில் இருந்து ஒன்றாக பயிலும் எங்களுக்கு நாய்கள் மீது பிரியமும், பரிவும் உண்டு. தெருநாய் பிரச்னைக்கு என்ன செய்யலாம் என யோசித்தோம்.

ஹூமைன் அனிமல் சொசைட்டி (ஹாஸ்), 'பாசம் பீப்பள்'ஸ் சொசைட்டி மற்றும் எஸ்.பி.சி.ஏ., போன்ற தன்னார்வ அமைப்புகளை சந்தித்தோம். எங்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு, தெருநாய்களுக்கான தேவை என்ன, எப்படி களப்பணியாற்றுவது என்பது குறித்து விளக்கினர். இந்த அமைப்புகளோடு இணைந்து, கடந்தாண்டு கோடை விடுமுறையில் தெருக்களில் தண்ணீர் பவுல் வைப்பது, தத்தெடுப்பு முகாம் நடத்துவது, தத்தெடுப்புக்கு தகுதியுள்ள பப்பிகளை சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிடுவது போன்றவற்றில் இறங்கினோம்.

பிறகு பள்ளி நண்பர்களை இணைத்து 'சிக்கு' என்ற பெயரில், எங்கள் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டோம். 'சிக்கு' துவங்கிய பிறகு, ஹாஸ் உடன் இணைந்து, 'ஆர்ட் வித் பப்பி அடாப்ஷன்' நிகழ்ச்சி நடத்தினோம். அதில் பங்கேற்றவர்கள் வழங்கிய கட்டணத்தில் 300 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டோம்.

நண்பர்கள், உறவினர்களிடம் இதுவரை 500 கிலோ அரிசி பெற்று, தெருநாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு இலவசமாக தந்துள்ளோம். அடுத்த ஆறு மாதத்தில் 300 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்டி வருகிறோம்.

கோயமுத்துார் ரோட்டரி கிளப் ஆப் சென்ட்ரல் சார்பில், ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பிற தன்னார்வ அமைப்புகளை சந்திப்போம். கரு த்தடைக்கு 'ஹாஸ்' அமைப்பும், தெருநாய்களின் போக்குவரத்து பணிகளுக்கு, 'பாசம் பீப்பள்ஸ் சொசைட்டி'யும் உதவுகின்றன. தற்போது பிளஸ் 2 படிப்பதால், பொதுத்தேர்வில் கவனம் செலுத்துகிறோம். ஆதரவற்ற தெருநாய்களுக்கு புகலிடம் அமைப்பது, அவற்றிற்கு உணவு, மருத்துவ சிகிச்சைக்கு உதவுவது என சில திட்டங்கள் உள்ளன. வரும் காலத்தில் செயல்படுத்துவோம், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us