ADDED : மார் 30, 2024 08:25 AM

'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல... அதையும் தாண்டி'ங்கற பேக்ரவுண்டு சாங்கை அலறவிட்டு, தன் செல்லப்பிராணிகளை கொஞ்சுவது போன்ற வீடியோக்கள் தான், சோசியல் மீடியாக்களில் அதிக லைக்குகளை குவிக்கின்றன. இப்படியான உணர்வைத்தரும் பெட்ஸ்களின் ஆபத்தான தருணங்களில், 'நாங்க இருக்கோம்'னு ஓனர்களின் கரங்களை இருகப்பற்றுகின்றன, இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள்.
ஆம்! நம்மைப் போல செல்லப்பிராணிகளுக்கும் மெடிக்கல் எமர்ஜென்சிக்கு, இன்ஸ்சூரன்ஸ் பாலிசிக்கள் கைகொடுக்கின்றன. 3 மாதம் முதல் 10 வயது வரையிலான நாய், பூனைகளுக்கு, இந்த பாலிசிக்கள் பொருந்தும். திருடு போனால் விளம்பரப்படுத்துதல், சன்மானம் கொடுப்பதற்கு, கிளைம் செய்யலாம். உங்க செல்லப்பிராணி வெளியாட்களை கடித்துவிட்டால், அவர்களின் மெடிக்கல் பில்லும் இதில் கவராகும்.
ஆன்லைன், ஆப்லைனிலும் இந்த பாலிசிக்களை பெறலாம். நிறுவனங்களுக்கு ஏற்ப, சில ஸ்கீம்கள் மாறுகின்றன. அப்புறம் என்னங்க! 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்...'னு, தைரியமா சொல்லி, எகிறும் மெடிக்கல் செலவை, இனி ஈஸியா சமாளிக்கலாமே!

