ADDED : டிச 13, 2024 08:06 PM

நிழலாக உங்களையே சுற்றி வரும், செல்லப்பிராணிகள் திடீரென தொலைந்துவிட்டால் ஏற்படும் வலியை, வார்த்தைகளால் விளக்க முடியாது. உலகமே இருள் சூழ்ந்தது போலவும், எப்படியாவது திரும்ப அதை மீட்டு கொண்டுவர வர வேண்டுமென்பதும் மட்டுமே, உயிர் துடிப்பின் ஓசையாக இருக்கும். இதுபோன்ற உணர்வு போராட்டம் நடக்க கூடாதென்பதற்காக தான், சந்தையில், 'பெட் ஜி.பி.எஸ்., டிராக்கர்' அறிமுகம் செய்துள்ளனர்.
பப்பி, மியாவ் கழுத்தில் பெல்ட்டுடன் சேர்த்து, இதை கட்டிவிட்டால் போதும். அது எங்கே சென்றாலும் கண்டுபிடித்து விடலாம். நிறைய நிறுவனங்கள், இந்த ஜி.பி.எஸ்., டிராக்கர் பிசினஸில் களமிறங்கியுள்ளன.
பேட்டரியின் தன்மையை பொறுத்து விலை மாறுபடும். உங்களின் பட்ஜெட்டிற்கேற்ப வாங்கி கொள்ளலாம். செல்லப்பிராணியை தொலைத்துவிட்டு, விளம்பரங்கள் கொடுத்து, தேடுதல் படலத்தில் ஈடுபடுவதை விட, முன்னெச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது.

