
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பு றா, பறவைகளுக்கு டப்பாவில் தண்ணீர் வைத்தால் குடிக்கும் போதே கீழே சிந்துவதோடு, குதித்து விளையாடி, டப்பாவை தள்ளிவிட்டுவிடும். இதற்காகவே, பிரத்யேக வாட்டர் பீடர், மார்கெட்டில் கிடைக்கிறது.
இதில் கைப்பிடி இணைத்துள்ளதால், கூண்டு, பறவை விளையாடும் இடங்களில் மாட்டிவிடலாம். இதற்குள் தண்ணீர் நிரப்பி வெளியே வைத்தால், சுற்றி உள்ள துளைகளில் சொட்டு சொட்டாக வெளியேறும் தண்ணீரை, புறா மெல்ல குடிக்கும். இது, அதிக எடையுடன் இருப்பதால் கீழே தள்ளிவிட முடியாது. சிறிதளவே வெளியேறுவதால், தண்ணீர் வீணாவதையும் தடுக்கலாம். மூடியிருப்பதால் சுத்தமான தண்ணீரை, பறவைகள் குடிப்பதை உறுதி செய்யலாம். இவை வெவ்வேறு அளவுகளில் ஆன் லைனிலும் கிடைக்கின்றன.