ADDED : ஏப் 12, 2025 07:51 AM

மதுரையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பறவை, நாய், பூனை, முயல், கினியா பிக் உள்ளிட்ட செல்லப்பிராணி விற்பனை மையம் நடத்தும் குமரவேல் பாண்டியன் கூறியது: 'கினியா பிக்' குட்டியாக இருப்பதால், எங்கும் எடுத்துச்செல்லலாம். வெகுவிரைவில் நம்மிடம் பழக்கமாகிவிடும். நாய்போல நன்றி உடையது. ஜோடியாக வளர்க்க வேண்டும். திறந்தவெளியில் வைக்கலாம். கைகளில் அழகாக தவழ்ந்து கொஞ்சும் மொழி பேசும். வீட்டு வளாகத்தில் திறந்தவெளியிலும் விடலாம். சுத்தமான காய், பழம் கொடுக்கலாம்.
செல்லப்பிராணியாக வளர்க்கலாம். துாய்மையாக வைத்திருக்க வேண்டும். வெயில் காலத்தில் நன்றாக தண்ணீர் அருந்தும். பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பினால் நீந்தி சுத்தம் செய்துகொள்ளும். காலை 10:00 மணிக்கு மேல் வெயிலில் விடக்கூடாது. சிறிய அளவில் நிறைய உள்ளன. ஜோடி ரூ.350 முதல் ரூ.1000 வரை, என்றார்.

