ADDED : ஜூலை 25, 2025 10:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னியாகுமரி கென்னல் கிளப் சார்பில், அனைத்து இன நாய்களுக்கான கண்காட்சி, நடக்கிறது.
கென்னல் கிளப் ஆப் இண்டியா அமைப்பின் கீழ், மாவட்ட வாரியாக, பல கென்னல் கிளப் அமைப்புகள் இணைந்துள்ளன. இந்த அமைப்புகள் சார்பில், நாய்களின் தனித்திறனுக்கு மேடை அமைத்து தரும் வகையில், கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி கென்னல் கிளப் சார்பில், 23, 24வது சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி, நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்டியன் கல்லுாரியில், ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கிறது. காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், பார்வையாளராக பங்கேற்று, சாம்பியன் பப்பிகளை கண்டு ரசிக்கலாம் என, கிளப் செயலாளர் பார்வதி தெரிவித்தார்.