UPDATED : மார் 23, 2024 02:05 PM
ADDED : மார் 23, 2024 02:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிப்பிப்பாறை ரகத்தில் 'நிலா'; பொமேரியன் வகை, 'புஜ்ஜி' என இரு நாய்கள் வளர்க்கிறோம். எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. விசுவாசம், பாசம், சேட்டை மட்டுமின்றி, அவற்றுடன் விளையாடும் போது மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சி பெருகுகிறது.
சிப்பிப்பாறை நாட்டு ரகமாகவும், பிரமாண்டமாகவும், மிடுக்காகவும் உலா வரும். நாட்டு ரக நாய்கள் வளர்த்தால், பராமரிப்பு செலவு குறைவதோடு, பெரிதளவில் மெனக்கெட வேண்டியதில்லை. பருவ காலங்களுக்கு ஏற்ப, அதுவே தனது உடல் நிலையை சீராக வைத்துக்கொள்ளும்.இதற்கு, மோப்ப சக்தி அதிகம் உள்ளதால், வெகு துாரத்திலேயே, நாம் வருவதை உணர்ந்து, வித்தியாசமான குரலில், செல்லமாக வரவேற்கும். வேறு நபர்கள் வந்தால், குரைத்து மிரட்டும்.

