ADDED : மார் 30, 2024 08:49 AM

காலேஜ் எக்ஸ்போக்களில் கூட பெட் ஈவன்ட் ஸ்டால்ஸ் தான் இப்பல்லாம் டிரெண்டாகிட்டு வருது. இங்க பப்பிஸ் உடன் செல்பி, வீடியோ எடுத்து, இன்ஸ்டா மாதிரியான சோசியல் மீடியாக்களில், ஹார்ட்டீன் எமோஜிக்களை அள்ளுவது தான் இளசுகளின் பொழுதுபோக்கு. சமீபத்தில் கோவையில், ஒரு தனியார் கல்லுாரியில், நடந்த பெட் ஈவன்ட்டுக்கு, ஸ்டூடன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு.
கென்னல் அட்ரஸ் விசாரிச்சு விசிட் அடிச்சோம். கோவை, சரவணம்பட்டி அடுத்த கீரணத்தத்தில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில், 'ட்ரீம் பெட் ஹவுஸ்' என்ற பலகையுடன் பளீச்சிட்டது அந்த கென்னல். கல்லுாரி முடித்தவர்கள், படித்து கொண்டிருப்பவர்கள் என, இளவட்டங்கள் சேர்ந்து இக்கென்னல் உருவாக்கினோம் என்றார், அதன் ஓனர் சிவா.
''என் வீட்டுல இருந்த பப்பிக்காக தான் கென்னல் அமைக்க இடம் தேடுனேன். என் பட்ஜெட்டுக்கு இந்த இடம் கிடைச்சுது. நானும் மாரி, தர்ஷன்னு காலேஜ் படிக்கற பசங்க சேர்ந்து செடி வளர்த்து, கென்னல் செட்டப் உருவாக்குனோம். சின்னதா ஒரு வீடு கட்டி இங்கே தங்க ஆரம்பிச்சோம். பிரெண்ட்ஸ் தெரிஞ்சவங்க வெளியூர் போகும் போது, அவங்க டாக்ஸ, என் கென்னல்ல தங்க வச்சாங்க. இப்படி தான், ட்ரீம் பெட் ஹவுஸ் உருவாச்சு''னு ஆர்வமாய் தெரிவித்தார் சிவா.
டாக் ஷோ, பெட் ஈவன்ட்டுன்னு இப்ப நாங்க ரொம்ப பிசின்னு, சிவா தோளில் கைப்போட்டபடி பேச்சை தொடர்ந்தார் தர்ஷன். ''காலேஜ் ஈவன்ட்ஸ்ல, எங்க கென்னல் பேர்ல ஸ்டால் எடுத்து, பிரெண்ட்லி டாக்ஸ் மட்டும் கொண்டு போவோம். பெட் விரும்பாத யூத் இருப்பாங்களா?. செல்பி எடுப்பது, வீடியோ எடுப்பதுன்னு, நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும். இது மூலமா, நிறைய டாக் லவ்வர்ஸ் உருவாகிட்டு இருக்காங்க'' என்றார்.
இங்க வேற என்னெல்லாம் இருக்குனு கேட்டோம். ''20 டாக்ஸ் தங்க வைக்கற அளவுக்கு இடவசதி இருக்கு. போர்டிங் மட்டுமில்லாம, ஸ்விம்மிங், குரூமிங், ஸ்பா, ப்ரீடிங்னு, பெட் லவ்வர்ஸ் தேடுற எல்லாமே இருக்கு. டாக் சேல் பண்றோம். எங்ககிட்ட இருந்து, போலீஸ் டாக் ஸ்குவாடுக்கு, 5 டாக்ஸ் போயிருக்குனு, கென்னல் ஆக்டிவிட்டிஸ் பத்தி விளக்கினார் சிவா. நான்கு ஸ்கூட்டர்களில் இளைஞர் பட்டாளம் வந்திறங்கியது. பிளே ஏரியாவில், இருந்த சில டாக்ஸ் உடன் விளையாட களமிறங்கினர். சரிதான், ஜாலியா ஒரு என்டர்டெய்ன்மென்ட் பிசினஸ்; சூப்பரா இருக்கே...!

