ADDED : ஏப் 20, 2024 10:39 AM

* நாய்கள் கனவு காணும்.
* நாய்களின் மூக்குப்பகுதி, மனித விரல் ரேகை போன்று தனித்துவமானது
.* நாய்கள் 250 வகையான இடங்கள் / மனிதர்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறன் உடையது.
* அதிவேகமாக ஓடக்கூடிய நாய் இனம் - 'சாளுக்கி'
* குரைக்காத நாயினம் - பேசின்ஜி.
* சௌ சௌ மற்றும் செர்மிஸ் நாய்களின் நாக்கு கருப்பு நிறத்தில் இருக்கும். நாய்களின் கர்ப்ப காலம், 60 நாட்கள். கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலிலிருந்து மூன்று நாய்கள் மீட்கப்பட்டுள்ளன.
* நாய்களால் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தை காணமுடியும். மனிதன் சுவை நுகர்வு திறனில், ஆறில் ஒரு பங்கு மட்டுமே நாயால் அறிய முடியும். இரண்டு வயது குழந்தைக்கு உரிய மூளை வளர்ச்சியை நாய்கள் கொண்டு இருக்கும். பெரும்பாலும் நாய்க்குட்டிகள் பிறக்கும் போது பார்க்கும் மற்றும் கேட்கும் திறன் இருக்காது.
* நாய்களில் பெரும்பாலான வியர்வை சுரப்பிகள் கால் அடி பாதத்தில் உள்ளது. நாய்களுக்கும் பொறாமை குணம் உண்டு. தகவல்: முனைவர். சு. கிருஷ்ணகுமார், இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலை.

