sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/வா வாசி யோசி...

வா வாசி யோசி...

வா வாசி யோசி...


PUBLISHED ON : பிப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'விசில் அடிக்கத் தெரியும்; விசில் ஊதப் பிடிக்கும்; ஆனால், அதை நடிகருக்கோ அரசியல்வாதிக்கோ அல்லாது யாருக்காக எதற்காக செய்ய வேண்டும் என்ற தெளிவு எங்களிடம் உண்டு' எனச் சொல்லும் இவர்கள் மதுரை, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி யின் இளங்கலை பிரிவு பொக்கிஷங்கள்!

'சந்திரயான், மங்கள்யான் விண்வெளி திட்டப் பணிகளின் மூலம் நம் தேசத்திற்கு உலகளாவிய பெருமை ஈட்டிய இந்தியாவின் 'ராக்கெட் பெண்' விஞ்ஞானி ரிது கரிதால்; சவாலான தருணங்களில் நிதானமாக முடிவெடுக்கும் அவரது மனவுறுதியே என் இலக்கை உயரமாக நிர்ணயிக்க காரணம்; அவருக்கே என் விசில்!'

மு.நீ.காயத்ரி பிரசாத், கணினி அறிவியல்

'நெல்லை விரைவு ரயிலில் பார்வையற்ற ஒருவர் தன் இணையோடு பேனாக்கள் விற்றுக் கொண்டு இருந்தார். இருள் உலகெனினும் பிறர் கருணை எதிர்பாராது உழைக்கும் அவரது எண்ணத்தில் பெரும் திண்ணம்; இன்றும், நான் துவளும் தருணங்களில் என்னை மீட்டெடுப்பது அவரிடம் வாங்கிய அந்த பேனா மட்டுமே; அவர் எனக்கான ஒளி!'

பா.வித்யலட்சுமி, அனிமேஷன்

'ரத்தன் டாடா; 'கொரோனா' பேரிடர் காலத்தில் வாரி வழங்கிய கொடையாளி; எளிமையின் அடையாளமாய், அடக்கத்தின் மறு உருவமாய், சிறந்த சமூக நலவாதியாய், மனிதநேயம் மிக்கவராய்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 'செய்யும் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருங்கள்' எனும் பாடம் சொன்ன இச்சிகரத்திற்கே என் விசில்!'

எம்.கே.ராமேஸ்வரன், எம்.சி.ஹெச்.எம்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us