sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : மார் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இன்றைக்கு... இன்றைக்கு...' எனத் துவங்கி, சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லிவிட்டு, 'இதெல்லாம் ஊடகங்களில் வந்த செய்திகள்' என தற்காத்துக் கொள்ளும் எதிர்க்கட்சி தலைவரே... எதிர்வரும் தங்களது பிரசாரங்களில் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் இவை...

1. 'இன்றைக்கு... 'வாரிசு அரசியல்' பற்றி பிரதமரே கேள்வி எழுப்பினாலும், 'கேட்டு கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டு' என கடக்கிறார் மு.க.ஸ்டாலின்; இது, கேள்விக்கான பதிலா' எனக்கேட்டு எங்களை சிந்திக்க வைப்பீர்களா?

2. 'இந்த அவல ஆட்சி, கடைசி 90 நாட்களில் அவசரகதியில் செலவிட்ட டெண்டர் தொகை ரூ.40 ஆயிரம் கோடி' என, 2021 தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்தினம் மு.க.ஸ்டாலின் வீசிய அஸ்திரம் போன்று, இப்போது நீங்கள் ஏதேனும் வீசுவீர்களா?

3. 'தி.மு.க., பொதுச்செயலர், பொருளாளர் பதவிகளில் ஒன்று, பட்டியல் வகுப்பினரான ஆ.ராசாவுக்கு கிடைக்கும்' என, ஆறு ஆண்டுகளுக்கு முன் நம்பி ஏமாந்து போன 'சமூக நீதி'யை மறந்தாயிற்றா' என நினைவூட்டுவீர்களா?

4. 'அ.தி.மு.க.,வை கரையானாய் ஓ.பி.எஸ்., அரித்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்த மு.க.ஸ்டாலின், இன்று அக்கரையானுக்கு தி.மு.க.,வில் இடம் தந்ததன் மூலம் தமிழக மக்களுக்கு உணர்த்துவது என்ன' எனக் கேட்பீர்களா?

5. 'பா.ஜ., தமிழ் மண்ணுக்கு எதி ரி; தமிழர்களின் எதிரி என்று தி.மு.க., தலைவர் சொல்கிறார்; திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில் பெரும்பான்மை தமிழர்களின் உரிமைக்காக போராடுவது யார்' என திரி கிள்ளுவீர்களா?

6. 'உன் சுற்று வரும்வரை நீ காத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று அண்ணாதுரை சொன்னதாக தி.மு.க., தலைவர் சொல்லும் அறிவுரை, 'சீட்' கிடைக்காத தொண்டர்களுக்கு மட்டும்தானா... வாரிசுகளுக்கு இல்லையா' என யோசிக்கத் துாண்டுவீர்களா?

7. 'நான் ஆளுமை திறனற்றவன் எனில் என்னை எதிர்க்க ஏன் கூட்டணி என்று கடந்த தேர்தலில் கேட்ட ஸ்டாலின் அவர்களே... இன்று நீங்கள் நடத்துவது 'நல்லாட்சி' எனில் உங்களுக்கு எதற்காக கூட்டணி' என்று கேட் பீர்களா?

7 ½ 'சி.வி.சண்முகமே... ஜாக்கிரதை' என எச்சரிப்பீர்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us