
'ஏன் இப்படி படம் எடு க்குறீர்கள்' எனும் கேள்வி தன்னை மிகவும் பாதிப்பதாக பத்திரிகையாளர்களிடம் இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லி இருப்பதால், அக்கேள்வி தவிர்த்து இக்கேள்விகளுக்கு பதில் கேட்கிறது தமிழக ம்!
1. 'அறுவை சிகிச்சையில் நோயாளி அலறத்தான் செய் வான்; அவனை குணப்படுத்த வேண்டியது மருத்துவர் கடமை' என்று பொங்கும் நீங்களே, 'ஏன் ஜாதி படம் எடுக்குறீர்கள்' எனும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அலறலாமா?
2. மதவாத கட்சியை இணைத்து, 'மதச்சார்பற்ற கூட்டணி' என்று பெயர் சூட்டிக் கொள்வதற்கும், 'ஜாதிக்கு நான் எதிரானவன்' குரலோடு ஜாதி வெறி குரூரங்களை படம் பிடித்து பணம் பண்ணுவதற்கும் என்ன வித்தியாசம் மாரி?
3. 'ஹிந்து வெறுப்பை ஆதாரங்களோடு சொல்லும், தி காஷ்மீர் பைல்ஸ், தி பெங்கால் பைல்ஸ் படைப்புகள் மதவெறி துாண்டுகின்றன' எனில், ஜாதிய மோதலை பரபர கதையாக்கிச் சொல்லும் தனிமனிதனின் நோக்கம் என்ன?
4. 'நன்றாக படி; ஜெயிக்கலாம்' எனும் வகுப்பறை அறிவுரைப்படி படிக்கும் மாணவனுக்கு கிடைக்காத வாய்ப்புகள ் , மதிப்பெண் குறைந்த மாணவனுக்கு ஜாதி அடிப்படையில் கிடைப்பது ஜாதிய கொடுமையா... சமூக நீதியா மாரி?
5. 'என் ஜாதியில் பெண்கள் இல்லை என்றால் தானே நான் வெளியில் காதல் தேட வேண்டும்' என்ற ஜாதி பெருமிதம் இல்லாது தன் ஜாதி பெண்களை தவிர்ப்பவன், தன் ஜாதிக்குரிய அரசு சலுகைகளை அனுபவிக்க தகுதி உடையவனா?
6. உங்கள் படைப்புகளை உச்சி முகரும் அதிகார வர்க்கம், தங்கள் வீட்டின் உணவு மேஜையில் உங்களுக்கான விருந்தை குடும்பத்தோடு இன்னும் பரிமாறாமல் இருப்பது ஏன்; ஆக... உங்களையும் பயன்படுத்துகிறார்களா மாரி?
7. 'வசீகர திரைமொழி கைவரப் பெற்றிருக்கும் நீங்கள், ஜாதியம் பேசாத ஒரு படைப்பை தந்து பாருங்கள்; உங்களை வெறுக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் இல்லை என்பதை உணர்வீர்கள்' என்று சொன்னால் நம்புவீர்களா?
7 ½ 'தழும்பு' கீறி 'காயம்' பார்ப்பது கலைக்கு கவுரவமா?

