
'யாருக்கு நான் விசில் அடிக்கி றேனோ... அவர் வீட்டுப் பிள்ளைகள் என்போல்
யாருக்கும் விசில் அடிப் பதில்லை' எனும் உண்மை அறிந் தும் விசில்
பறக்கவிடும் என்னிடம் என் மனம் கேட்கும் கேள்விகள் இவை...
1. சதை ததும்பும் கதை, ரத்தம் சொட்டும் காட்சிகள், 'இசை' போர்வையில் இரைச்சல்... இவற்றை அறிமுகப்படுத்த 'டிரெய்லர் வெளியீடு' எனும் துதி பாடும் மேடை... திரையரங்கிற்கு உன்னை இழுக்க இனி இவை போதும்தானே?
2. உன் குடும்ப உறுப்பினர்களின் பசி தீர்க்க 75 வயதிலேயும் இரவு காவலாளி பணி செய்யும் உன் தகப்பனிடம் காணாத என்ன கம்பீர த்தை , என்னவிதமான உழைப்பை திரையில் வேஷ மிட்டு உலவும் நடிகரிடம் காண்கிறாய்?
3. 'அந்த கொடும் வேரறுக்க வந்துவிட் டேன்' என்று சொல்லி ஓட்டு வாங்கி, அவ்வேர் தாங்கும் மர நிழலிலேயே தஞ்சம் அடைந்திருப்பவரை... 'அரசி யலிலும் மிகச்சிறந்த நடிகர்' எனச் சொன்னால் இதற்கும் கைதட்டுவாய் அல்லவா?
4. பலமுறை தமிழகத்தை ஆண் ட கட்சிகளின் அன்றைய, இன் றைய தலைவர்களிடம் பல குறை களை நிரம்ப காண்கையில், இன்று வரையிலான நடிகனை 'தமிழகத்தை காக்க விருக்கும் தலைவன்' என எப்படியப்பா நம்புகிறாய்?
5. 'இத்தனை பேருக்கு உதவுகிறேன்' என, தான் கிள்ளித் தந்ததை மேடையேற்றி கைதட்டல் வாங்கும் நடிகர், 'ரசிகர்களால் நான் சேர்த் திருக்கும் சொத்து இவ்வளவு' என்று எந்த மேடையிலும் அறம் பேசுவதில்லையே... ஏன்?
6. 'தன் ஒழுக்கத்தை உரித்து காட்டும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் மவுனமாய் கடந்து செல்லும் நடிகரை கொண்டாடு வது முறையா' என்றால், 'உனக்கென்ன மயி...' என்றுதானே எகிறுவாய்?
7. தன்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளரது நஷ்டத்தை சிறிய அளவில் ஈடு செய்வதையும் விளம்பரப்படுத்தும் நடிகர்கள், நம்பி வந்து ஏமாந்த ரசிகர்களது பண, நேர விரயத்திற்கு ஏதேனும் ஈடு செய்த தாக நீ அறிந்திருக்கிறாயா ?
7 ½ கூலி - முதல்நாளன்றே பார்ப்பது தானே கெத்து?

