sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 18, 2026 ,சித்திரை 5, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

முதல்வரே... ஒரு நிமிஷம்!

/

முதல்வரே... ஒரு நிமிஷம்!

முதல்வரே... ஒரு நிமிஷம்!

முதல்வரே... ஒரு நிமிஷம்!


PUBLISHED ON : ஏப் 12, 2026

Google News

PUBLISHED ON : ஏப் 12, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்தி: ஜம்மு - காஷ்மீர் 'ஆப்பரேஷன் ரக்சா'வில், வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர்

அநீதி: 'இலவச வீடு' உரிமைக்காக 20 ஆண்டு களாக அரசுடன் போராடும் அவரது குடும்பம்

முதல்வரே... நான் ராணுவ வீரர் வெங்கடேசனின் தாய் வள்ளியம்மாள்; 62 வயதாகும் நான் ராணிப்பேட்டை, சோளிங்கர் வட்டம் செங்கல் நத்தம் கிராமத்தில் வசிக்கிறேன்.

இந்திய ராணுவ சிப்பாயாக ஏழு ஆண்டுகள் பணியாற்றிய என் மகன், பிப்ரவரி 6, 2004ல் வீரமரணம் அடைந்தான். வேலுார் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்த, ராணுவ மரியாதையோடு இறுதிச்சடங்கு நடந்தது. ஏப்ரல் 01, 2004 தேதியிட்ட நீலகிரி, வெலிங்டன் 'மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆவண காப்பக' கடிதம் [எண்:260186K/Wel/17/NE-2(3)] மூலம் சிறு ஆறுதல் கிடைத்தது.

அக்கடிதத்தில், 'போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து கிடைக்கும் நிவாரணம், வேலைவாய்ப்பு, மூன்று ஏக்கர் நிலம் மற்றும் வீடு அல்லது மனை ஒதுக்கீடு உள்ளிட்ட பலன்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவுபடுத்தவும்' என வேலுார் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு வலியுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி, ஐந்து லட்ச ரூபாய் நிவாரணமும், இளைய மகனுக்கு மீன்வளத்துறையில் உதவியாளர் பணியும் கிடைத்தது. ஆனால், வீடு, மனை தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஆட்சியரிடம் மனு அளித்தும் பலனில்லை. அய்யா... மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்... சொன்னதைச் செய்ததா உங்கள் 'திராவிட மாடல்' அரசு?






      Dinamalar
      Follow us