
'இரண்டு வருஷமா முதல்வர் கோப்பைக்கான ஜூடோ போட்டியில தங்கப்பதக்கத்தையும், பரிசுத் தொகையையும் அள்ளிட்டு வர்றான் பாரு புள்ள... நம்ம மாட்டாங்குப்பத்தை ரொம்ப உசத்திட்டான்யா!' - மக்கள் அஜேைஸ இப்படித்தான் கொண்டாடுகின்றனர்!
ஏரியாவுல கெத்து காட்டுவீங்களா தம்பி?
வீட்டு வாசல்ல படுத்து விமானத்தை பார்த்துட்டு இருந்த நான், விமானத்துல பல மாநிலங்களுக்கு பயணம் பண்றேன். இன்னைக்கு என் ஏரியா பசங்க என் பாதையை, என் வளர்ச்சியை கவனிக்கிறாங்க. அவங்களுக்கு நான் தப்பான வழியை காட்ட மாட்டேன். இது, என்னை வளர்க்குற ஜூடோ மேல சத்தியம்!
அஜேஸ்குமாரின் பெற்றோர் துாய்மை பணியாளர்கள். கல்லுாரி, பள்ளி செல்லும் இரு தங்கைகள். ஒரு ஆச்சரிய செய்தி... அஜேஸுக்கு ஜூடோ மீது காதல் வந்த வயது... நான்கு!
'உச்சி - மாடா, இப்பான் - ஷியோநாகே, மொரட்டோ - ஷியோ நாகே, ஓ - கோஷி' எனும் 'ஜூடோ' தற்காப்பு கலையின் இச்சண்டை நுணுக்கங்கள் எல்லா வற்றிலும் தேர்ந்திருப்பதாகச் சொல்லும் அஜேஸ், இதன்மூலம் தைரியம், நேர்மை, விடாமுயற்சி, தன்னடக்கம், மரியாதையான அணுகுமுறை உள்ளிட்ட ஒழுக்கநெறிகள் கைவரப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.
இதுவரையிலான அங்கீகாரங்கள்
* நான்காம் வகுப்பு பயில்கையில், மாவட்ட அளவிலான போட்டியில் முதல் வெள்ளி பதக்கம்!
* 'மைனஸ் 25' கிலோ எடைப்பிரிவில், 10 வயதில் மாநில அளவிலான போட்டியில் முதல் தங்க பதக்கம்!
* ஹரியானாவில் 2022ல், 'கேலோ இந்தியா - 2021' போட்டியில் 'மைனஸ் 55' கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றதால் தேசிய தரவரிசையில் 5ம் இடம்!
* 'மைனஸ் 60' கிலோ எடைப்பிரிவில், 18 வயதிலேயே 21 வயதினருக்கான சீனியர் பிரிவில் இடம்!
'ஜூடோ மட்டுமே சோறு போட்டிரும்'னு நம்புறீங்களா?
ம்ஹும்... அது, எனக்கு மூச்சுக்காத்து மாதிரி; அந்த சுவாசத்தோட நிறைய சாதிக்கணும்னு ஆசையிருக்கு! பயிற்சிக்கும், படிப்புக்கும் இடைப்பட்ட நேரங்கள்ல போட்டித்தேர்வுக்கு தயார் பண்றேன். 'உடற்கல்வி ஆசிரியர் ஆகணும்'னு ஆசை. காவல் துறை, ராணுவம் மேலேயும் ஈர்ப்பு இருக்கு. வாய்ப்புகள் வர்றப்போ நான் தகுதியா இருக்கணும்ங்கிறதால என் உடலையும், மனசையும் தயார்படுத்திட்டு வர்றேன்.
சென்னை, மெரினா கடற்கரை கண்ணகி சிலைக்கு எதிர்சாலையில் இருக்கிறது 'மாட்டாங்குப்பம்' மீனவ குடியிருப்பு; இங்கிருக்கும் 21 வயது இளைஞன் அஜேஸ்குமாரை உங்களுக்குத் தெரியுமா?
@block_B@ கில்லி: அரியலுார், மீனாட்சி உடற்கல்வியியல் கல்லுாரியில் இளங்கலை உடற்கல்வி படிப்பில் இணைந்திருக்கும் இவருக்கு, ஜூடோ விளையாட்டே வாழ்க்கை!@@block_B@@
கில்லியின் நம்பிக்கை
அஜேஸ் : கல்வியைக் காட்டிலும் கம்பீரமானது எதுவுமில்லை!

