sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/நிலமும் நானும்

நிலமும் நானும்

நிலமும் நானும்


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'என் காதலுக்கு வயசு 20'

புதுக்கோட் டை, பரம்பூர் சேந்தாங்கரை கிராமம்; 12 ஏக்கர் விவசாய நிலம் கொண்டிருக்கும் பொன்னையாவின் கரங்களில், வயலில் இருந்து அள்ளிய ரோகு மீன். இனி அவர் சொல்ல இருக்கும் 20 ஆண்டு காதல், மீன் பற்றியதல்ல... இம்மீன் வளர்க்கும் அவர் நிலம் பற்றியது!

அது, 2005ம் ஆண்டுன்னு நினைக்கிறேன்; நிலத்துல சூரியகாந்தி போட்டிருந்தேன். காய் புழுக்களை விரட்டலாம்னு ஒருநாள் 'எண்டோசல்பான்' தெளிச்சுட்டு வீட்டுக்குள்ளே நுழையுறேன்... மயக்கம்; கண் முழிச்சப்போ, '15 நாளா கோமாவுல கிடந்தேய்யா'ன்னு சொந்த பந்தம் சொல்லுச்சு!

காதல் துளிர்த்த தருணம்

உடம்பு தேறினதும், 'இத்தனை வருஷமா உரம், பூச்சிக் கொல்லின்னு மாறி மாறி தெளிச்சோமே... நிலத்துல நுண்ணுயிரிக ள் எவ்வளவு அவஸ்தையை அனுபவிச்சி இருக்கும்'னு மனசுல ஒரு வலி; நிலத்துல இனி விஷம் கலக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

'தமிழ்நாடு நீர்வள - நிலவள திட்டம்' மூலமா, என் நிலத்துல பண்ணை குட்டை அமைச்சு மீன் உற்பத்தி செய்ய வேளாண்மை துறையினர் உதவி பண்ணினாங்க. 1,000 சதுர மீட்டர் குட்டையில, ஆறு வகையில, 1,000 மீன் குஞ்சுகள் வளர்த்து, எட்டு மாசத்துல 680 கிலோ மீன்கள் எடுத்தேன்; 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது!

லாபமான நஷ்டம்

ஒருதடவை க டுமையான மழையில நெல் வயல் நிறைஞ் சிருச்சு; குட்டையில இருந்த கால்வாசி மீன் குஞ்சுகளை எடுத்து வயல்ல விட்டேன்.

அப்படி எட்டு மாதம் வயல்ல வளர்ந்த 1,200 மீன்கள், 750 கிலோ தேறுச்சு; பண்ணை குட்டையில தீவனம் போட்டு வளர்த்த 1,800 மீன்களோட எடை 620 கிலோ; 50 ஆயிரம் ரூபாய் வருமானம். மழை தந்த நஷ்டத்தை மீன்கள் வளர்த்து சரி பண் ணி ருச்சு என் நிலம்!



அன்று முதல்...


கிடைச்ச பாடம் மூலமா, வயல்ல இரண்டடிக்கு நீர் தேக்கி மீன் வளர்த்தேன்; அதுக உணவுக்காக பாசிகளையும் வளர்த்தேன். எட்டு மாசம் கழிச்சு மீன்களை வித்துட்டு, தண்ணியை வெளியேத்தி, மீன் கழிவுகள் கலந்த சேத்துல நெல் நடவு பண்ணினேன்.

அந்த வருஷம் அஞ்சு ஏக்கர் நிலத்துல மீன்கள் மூலமா எட்டு லட்சம் ரூபாய், நெல் சாகுபடியில இரண்டு லட்ச ரூபாய்னு நல்ல வருமானம்!

இதுல நான் எதிர்பார்க்காத கூடுதல் பலனும் கிடைச்சது; ஆமா... தமிழக விவசாய நிலங்கள்ல 100 கிராம் மண்ணுக்கு 0.1 சதவீதம்னு உள்ள கரிமச்சத்து, என் நிலத்துல 0.45 சதவீத மா இருக்குது.

நிலம் தந்த பரிசுகள்

1. நிலத்துல கரிமச்சத்தை அதிகரிச்சதுக்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு எனக்கு 'வேளாண் செம்மல்' விருது தந்தது

2. 2025ல் இந்தியாவின் சிறந்த பத்து விவசாயிகளுக்கு ஜனாதிபதி மாளிகை தந்த ' தேநீர் விருந்து' ல எனக்கும் இடம் கிடைச்சது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us