sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

நிலமும் நானும்

/

நிலமும் நானும்

நிலமும் நானும்

நிலமும் நானும்


PUBLISHED ON : நவ 02, 2025

Google News

PUBLISHED ON : நவ 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ம்ம்ம்... தரிசா போட மனசில்லாம இந்த மண்ணோட மல்லு கட்டிட்டு கிடக்குறேன்!'

'அண்ணே... அண்ணே... இருங்கண்ணே... இந்தா வந்துட்டோம்!'

உச்சி பொ ழுது இ றங்கியதும் எள் அறுத்த வயலில் இருந்து களமேறிய பெண்கள், அறுத்த செடிகளை ஒற்றை ஆளாய் வண்டியில் ஏற்றும் விவசாயி செல்வத்திற்கு உதவ ஓடி வருகின்றனர்.

மதுரை சித்தாலங்குடிக்காரர் செல்வம்; மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் டிப்ளமா பெற்றிருக்கிறார்; கடந்த 10 ஆண்டுகளாக இய ற்கை விவசாயி !

'என் அ ப்பா மாட்டுத்தரகர். அவ ரோட அக்கா வீட்டு பூர்வீகச் சொத்து இந்த நிலம்; இதை, என் அம்மாவோட நகைகளை வித்து வாங்கினார். இந்த ஒரு ஏக்கர்தான் எங்க வீட்டு அன்னலட்சுமி!' - நிலம் மீதான செல்வத்தின் பார்வையில் பிள்ளையின் பாசம்!

வீட்டில் ஒருவராய் நிலம்

அப்பா காலத்துக்கு அப்புறம் அண்ணன் கல்யாண செலவுல இருந்து எல்லா கஷ்ட நேரத்துலேயும் கை கொடுத்தது இந்த வயல்தான்! 'விதைக்கிறது மட்டும்தான் நம்ம வேலை; என்ன கொடுக்கணும்னு அவளுக்குத் தெரியும்'ங்கிறது அப்பாவோட நம்பிக்கை; என் நம்பிக்கையும் அதுதான்!

மாட்டு கிடையும் மிளகாய் கரைசலும்

பொன்னு மாதிரி நெ ல்லு விளையுற இந்த பூமிக்கு மாட்டுச் சாணமும், கோமியமும்தான் அடி உரம், மேல் உரம் எல்லாம்! வருஷத்துக்கு ஒருநாள் வயல்ல மாடுகளை அடைப்பேன். தேவைப்பட்டா, சாணத்தை ஊறல் போட்டு நீர் பாய்ச்சுறப்போ கலந்து விடுவேன்! மழையைப் பொறுத்து புரட்டாசி, ஐப்பசியில விதைச்சு மாசி கடைசியில அறுவடை பண்ணிருவேன்!

கதிர் பால்பிடிச்சு வர்றப்போ மட்டும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிப்பேன்; இதுதான் என்னோட பூச்சி விரட்டி! குருத்தா இருக்குற கதிருங்க கரைசல் தெளிச்சதும் பச்ச புள்ளையாட்டம் துள்ளிக்கிட்டு வரும் பாருங்க... அவ்வளவு அழகா இரு க்கும்!

கைவிடாத கடைமடைக்காரி

என் அன்னலட்சுமி கடைமடைக்காரியா இருந்தாலும் எப்பவும் என்னை ஏமாத்தினதில்லை. 'பருவமழையை நம்பித்தான் பாசனம்'ங்கிறதால ஒரு போகத்துக்கு மேல... ம்ஹும்! நெல்லு அறுத்ததும் ஒருதடவை உழவு ஓட்டி பங்குனி, சித்திரையில எள்ளு விதைப்பேன்; ஆனி கடைசியில அறுப்பு!

நிலத்துக்கு நன்றிக்கடன்

என் அன்னலட்சுமி பேரைச் சொல்லி 108 கிலோ அரிசியை வருஷம் தவறாம சதுரகிரி மகாலிங்கசாமி கோவில் அன்னதானத்துக்கு கொடுக்குறேன். என்ன... ஆடியில இருந்து அடுத்து கண்மாய் பெருகுற வரைக்கும் நிலத்தை தரிசா போட்டிருக்கிறது நெஞ்சை அறுக்குது. ஆழ்துளை கிணறுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்குறேன். நேரம் கூடி வந்துட்டா ரெண்டு போகம் பார்த்திருவேன்.

இந்த விவசாயியின் கனவு நிறைவேறட்டும்.






      Dinamalar
      Follow us