sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/பல் முளைத்த பால்வாடி சங்கம்

பல் முளைத்த பால்வாடி சங்கம்

பல் முளைத்த பால்வாடி சங்கம்


PUBLISHED ON : ஏப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மச்சி... நம்ம ளை ஏன்டா 'பால்வாடி பசங்க'ன்னு இந்த சமூகம் கலாய்க்குது?

அது ஒண்ணுமில்ல மச்சான்... '2021 தேர்தல் பிரசாரத்துல முக்கிய பேசுபொருள் துாத்துக்குடி ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை; 2026 தேர்தல் பிரசாரத்துக்கு அந்த வழக்கோட தீர்ப்பு; 'ப்பா... என்ன டைமிங்டா...'ன்னு ஆச்சரியப்படாம, பருப்பு சாதம் சாப்பிட்டோமா... படுக்கையில 'சுச்சூ...' போனமான்னு வாழ்றோம்ல...அதான்!

ம்ஹும்... எனக்கு அப்படிப்படலை மச்சி; 'மேற்கு வங்க பெண் மருத்துவரை நாசம் பண்ணி கொலை பண்ண சம்பவத்துக்கு இந்தியாவே அழுதுச்சு; அந்த பெண்ணோட அம்மா இந்த தேர்தல்ல பனிஹாதி தொகுதியோட பா.ஜ., வேட்பாளர்!

இங்கே, 'நீட் தற்கொலையாளி அரியலுார் அனிதாவுக்கு கவு ரவங்கள் தந்தவங்க, ஏன் இப்படி ஒரு வாய்ப்பை அனிதா குடும்ப த்துக்கு தரலை'ன்னு யோசிக்காம, 'தோனி எப்ப விளையாட வருவாரு'ன்னு வெயிட் பண்றோம் பாரு... இதான் காரணமா இருக்கும்!

இல்ல ப்ரோ... இதுவும் சரியான காரணமா தோணலை! இப்படி யோசிச்சுப் பாரேன்...

'வெறும் 27 இடங்கள்ல, அதுவும் தனக்குத்தானே செய்வினை வைச்சுட்டு போட்டியிடுற பா.ஜ.,வை, 'என் எதிரி'ன்னு சொல்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; ' 26 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அனுபவத்தோட, 164 இடங்கள்ல போட்டியிடுற தி.மு.க.,வே என் எதிரி'ன்னு சொல்ற புதுமுகம் சி.ஜோசப் விஜய்; இதுல யார் கெத்து'ன்னு விளையாட்டாக் கூட யோசிக்காம இருக்குறோ மே... இது காரணமா இருக் கலாம் இல்லையா?

சூப்பர் தல... எனக்கென்னவோ இந்த பாயின்ட் ஏத்துக்கும்படியா இருக்குது!

அப்படீங்கறே... அப்போ, 'பொது வாழ்க்கையில இருக்குற தலைவனுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம்னு, 'இல்லற அறம்' கடைப்பிடிக்கிற ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குமுறுன மாதிரி, ஏன் மற்ற கட்சி ஆளுங்க குமுறலை'ன்னு... அதான்டா... பால் குடிச்சுட்டு வாய் துடைக்காம நேத்து பேசிட்டு இருந்தோமே... அது காரணம் இல்லைங்கிறியா?

தெரியலையே மச்சி... வேணும்னா இதை மட்டும் இதை வாசிச்சுட்டு இருக்குறவங்ககிட்டே கேட்டிருவோமா?

டபுள் ஓகே; ஏங்க... 'பால்வாடி பசங்க' நாங்களா ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us