sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 23, 2026 ,பங்குனி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

கில்லி

/

கில்லி

கில்லி

கில்லி


PUBLISHED ON : மார் 22, 2026

Google News

PUBLISHED ON : மார் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'விளையாட்டு வீரர்' அந்தஸ்தில் அரசுப்பணி பெறுவதல்ல இவரது ஆசை; இவரது கனவே வேறு; இவர் ராமநாதபுரம் தடகள வீரர், பயிற்சியாளர் பிரசாந்த்.

அது, 2014ம் ஆண்டு; கல்லுாரிகளுக்கு இடையிலான தடகள போட்டி களம்; 21 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திற்கு பெயரை பதிவு செய்கிறார் பிரசாந்த். போட்டிக்கு முந்தைய நாள்... 1,500 மீட்டர் ஓட்டத்திற்கு பெயர் கொடுத்த சீனியர் பின்வாங்க, அந்த இடத்தில் பிரசாந்த் ஜெயித்தது வெண்கலம்; அடுத்த நாள், 21 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் வெண்கலம்!

'இக்கல்லுாரியின் 14 ஆண்டுகால வரலாற்றில் முதலாம் ஆண்டு மாணவன் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை' என்று ஈரோடு, செங்குந்தர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர்கள் பாராட்ட, 2014ல் துவங்கியது தடகளத்தில் பிரசாந்தின் வெற்றி ஓட்டம்!

29 வயது பிரசாந்தின் 'டாப் 2' சாதனைகள்...

* 'தமிழ்நாடு கிராஸ் கன்ட்ரி ரேஸ் - 2017, 2021, 2023, 2024'ம் ஆண்டுகளில் வென்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றது!

* பல்கலைக்கழக அளவிலான 5,000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டங்களில் மூன்று தங்க பதக்கங்கள் வென்றது!

'ஒரு வாரத்துக்கு 180 கி.மீ.,ன்னு இலக்கு வைச்சு பயிற்சி எடுத்துக்கிறேன். 'தடகள பயிற்சிங்கிறது தவம்; வரம் கிடைச்ச அடுத்த நாள் புதிய தவத்தை ஆரம்பிச்சிரணும்' என்கிறார் இந்த கில்லி.

'கில்லி' யின் கனவு...

'ஒரு பயிற்சியாளரா 10 தடகள வீரர்களையாவது இந்தியாவுக்கு நான் தரணும்!'






      Dinamalar
      Follow us