sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறிந்துகொள்வோம்

/

'உலக கோப்பை தொடரால், உயரும் இந்திய பொருளாதாரம் '

/

'உலக கோப்பை தொடரால், உயரும் இந்திய பொருளாதாரம் '

'உலக கோப்பை தொடரால், உயரும் இந்திய பொருளாதாரம் '

'உலக கோப்பை தொடரால், உயரும் இந்திய பொருளாதாரம் '


UPDATED : அக் 05, 2023 03:44 PM

ADDED : அக் 05, 2023 01:04 PM

Google News

UPDATED : அக் 05, 2023 03:44 PM ADDED : அக் 05, 2023 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடப்பு உலக கோப்பை தொடரால், பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து, இந்திய பொருளாதாரத்திற்கு ரூ.13,500 கோடி கூடுதலாக கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது

ஒரு கொண்டாட்டம். இந்தியாவில் உலக கோப்பை தொடர் நடப்பது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் தான். 12 ஆண்டுகளுக்கு பிறகு, சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மறுபுறம், உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவுமென பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரால், இந்திய பொருளாதாரத்திற்கு 1.64 பில்லியன்

டாலர், அதாவது ரூ.13,500 கோடிகள் கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2015ல்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ( 347.2 மில்லியன் டாலர் ) மற்றும் 2019ல் இங்கிலாந்தில்

(447.8 மில்லியன் டாலர்) நடந்த உலக கோப்பை தொடர்களால் கிடைத்த பொருளாதார தாக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

உலக கோப்பை தொடரால் சுற்றுலா பயணிகள் வருகை , உள்ளூர் உணவகங்கள் விற்பனை, நினைவுப் பொருட்களை வாங்குதல், ஹோம் டெலிவரிக்கு உணவு ஆர்டர் செய்தல், சுற்றுலா தலங்களுக்குச் செல்வது உள்பட பல்வேறு நிகழ்வுகளால், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியை காணும்.

Image 1179230


1. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை :

சென்னை, ஐதராபாத், டில்லி, லக்னோ, ஆமதாபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நவ.,19ம் தேதி வரை நடைபெறும் உலக கோப்பை தொடரை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இது கோவிட் தொற்றுக்கு முந்தைய அளவை விட, 80 முதல் 90 சதவீதம் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2. டிக்கெட் டிமாண்ட் அதிகரிப்பு.! :

உலகின் மிகப்பெரிய மைதானமான ஆமதாபாத் மோடி மைதானத்தில் 1 லட்சம் பேர்

போட்டிகளை கண்டு ரசிக்கலாம். இதில் சுமார் 30 முதல் 40 சதவீதம் பேர் குஜராத்தை

சேராதவர்களாக இருக்கலாம். டிக்கெட்களுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. கூடுதலாக

4 லட்சம் டிக்கெட்களை பிசிசிஐ வெளியிட்டது. அதுவும் விரைவாக விற்று தீர்ந்துள்ளது.

3. விமான, ஹோட்டல் புக்கிங் அதிகரிப்பு :

ஆமதாபாத்தில் அக்.,14ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் தினத்தன்று

ஹோட்டல் புக்கிங் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து ஆமதாபாத்துக்கு விமான டிக்கெட் விலை 104 சதவீதம் அதிகரித்துள்ளது.

4. டிவி விற்பனை அதிகரிப்பு :

உலக கோப்பை தொடரை பெரும்பாலானோர் டிவியில் கண்டு ரசிப்பர் என்பதால் டிவி விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சாம்சங், சோனி, எல்.ஜி, பானாசோனிக் போன்ற நிறுவனங்களின் 55 இன்ச் டிவி விற்பனை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு 100 சதவீதம் அதிகரித்துள்ளது

இவையனைத்தும் சேர்த்தால், நேரடியாக மற்றும் மறைமுகமாக என பொருளாதாரத்திற்கு ரூ.11,750 கோடி கிடைக்கும். மேலும் உள்ளூர் விற்பனையாளர்களிடம் வாங்குவது, சரக்குகள் விற்பனை உள்ளிட்டவற்றால், கூடுதலாக 15 சதவீதம் என மொத்தம் ரூ.13,500 கோடி, இந்திய பொருளாதாரத்திற்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us