/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்; அறியாத் தகவல்களை அறிவோம்..!
/
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்; அறியாத் தகவல்களை அறிவோம்..!
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்; அறியாத் தகவல்களை அறிவோம்..!
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்; அறியாத் தகவல்களை அறிவோம்..!
UPDATED : அக் 08, 2023 05:56 PM
ADDED : அக் 08, 2023 02:59 PM

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் நடத்திய ராக்கெட் தாக்குதலில், பலர் பலியாகி வருகின்றனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் பொதுமக்கள் பங்கர் எனப்படும் பதுங்குக் குழிகளுக்குள் பதுங்கி வருகின்றனர். ஹமாஸ் படைகள் வீசிய ஐந்தாயிரம் ராக்கெட்களில் 90 சதவீத ராக்கெட்களை இஸ்ரேல் படையினர் வானத்தில் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரை அறிவித்துவிட்ட நிலையில், பகுதிநேர ராணுவப் பணியில் இருக்கும் இஸ்ரேல் குடிமக்கள் பலர் தற்போது போராளிகளாக மாறி நாட்டைக் காத்து வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா, விரைவில் அமெரிக்கப் படைகளை அனுப்பி இஸ்ரேலுக்கு உதவும் எனப்படுகிறது. இந்தியாவோ, இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் பேசி சுமூகத் தீர்வுக்கு வர வேண்டுமென்கிற நிலைபாட்டுடன் உள்ளது. இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்துவருகிறது.
![]() |
இஸ்ரேலில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களது பிறப்பிடமான ஜெருசலேம் நகரம் உள்ளது. எனவே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடப்பது மதச்சண்டை என பலர் தவறாக நினைப்பர். நில ஆக்கிரமிப்பு சார்ந்தே கடந்த நூற்றாண்டு துவங்கி இருநாடுகளும் கனரக ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
![]() |
கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக ஹீப்ரூ மொழி பேசும் யூதர்களின் சொந்த நிலப்பரப்பாக பாலஸ்தீனம் கருதப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஐரோப்பிய நாடுகளில் தேசியம் மற்றும் நாட்டுப்பற்று அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் ஒட்டாமன் படைகளால் கட்டுப்படுத்தப்பட்ட இஸ்ரேலையும் உள்ளடக்கிய அப்போதைய பாலஸ்தீன நிலப்பரப்பு, பின்னர் பிரிட்டன் படையால் கைப்பற்றப்பட்டது.
பாலஸ்தீனத்தில் கிட்டத்தட்ட 87 சதவீதம் இஸ்லாமியர்கள் இருந்தபோதும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் சண்டை சச்சரவின்றி ஒன்றாகவே வாழ்ந்தனர். முதல் உலகப் போரில் ஒட்டாமன் படைகள் பிரிட்டிஷ் படைகளிடம் தோற்றதையடுத்து சர்ச்சை கிளம்பியது.
எந்த நாட்டை ஆண்டாலும் அங்கு உள்ளூர் மக்களிடையே பிரிவினை, மதச்சண்டை உண்டாக்கி, அதனை கைகட்டி வேடிக்கை பார்ப்பது பிரிட்டன் அரசாங்கத்தின் வழக்கம். (இந்தியா உட்பட..!) இதே உத்தியை பிரிட்டன் பாலஸ்தீனத்தில் 1920-1939ல் பயன்படுத்தியது.
ஐரோப்பாவில் உள்ள யூதர்கள் பலர் தங்கள் சொந்த நாடான பாலஸ்தீனத்துக்கு குடிபுக விரும்பினர். அவர்களது விருப்பத்தின் பெயரில் பல லட்சம் யூதர்களை பிரிட்டன் அரசு பாலஸ்தீனத்துக்கு விமானம், கப்பலில் கொண்டு வந்து சேர்த்தது. இதனால் பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களைக் காட்டிலும் வெளிநாட்டு யூதர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது.
![]() |
பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்கள் தங்கள் மதத்தினருக்கு தனி நாடு வேண்டுமென நினைக்கத் துவங்கினர். யூத பிரிவினைவாதிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கினர். இதனால் பாலஸ்தீனத்தில் இருந்து ஒரு நிலப்பரப்பை பிரித்து அதற்கு இஸ்ரேல் எனப் பெயரிட்டு அங்கு யூதர்கள் சுதந்திரமாக வாழ நினைத்தனர்.
1948 ஆம் ஆண்டு இதுதொடர்பான ஐநா., பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அதிக நிலப்பரப்பை இஸ்ரேல் ஆதரவாளர்கள் கையகப்படுத்தினர். இஸ்ரேல் எனும் புது நாடு பிறந்தது. இந்த நாளை பாலஸ்தீன ஆதவாளர்கள் கருப்பு நாளாக பாவித்தனர். இதனையடுத்து கிட்டத்தட்ட ஏழு லட்சம் பாலஸ்தீன குடிமக்கள் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்டு பல்வேறு அரபு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
![]() |
அப்போது துவங்கி பல ஆண்டுகளாக இஸ்ரேல், பாலஸ்தீன எல்லையில் பதற்றம், போர் நிலவிவருகிறது. பாலஸ்தீன காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் படையினர் அடிக்கடி இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தினர். ஓஸ்லோ அக்கார்டு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. 1962, 1993, 94 என பல ஆண்டுகளில் போர் வெடித்து பலநூறு குடிமக்கள் இரு நாடுகளிலும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க பில் கிளின்டன் ஆட்சிகாலத்தில் இருநாடுகளிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டார். ஆனாலும் இரு நாடுகள் இடையே போர் தொடர்ந்தது. அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே நிதி உதவி, படை உதவி புரிந்து வந்துள்ளது.
![]() |
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், தனது 'பீஸ் ஃபார் ப்ராஸ்பரிட்டி' திட்டத்தின்கீழ் பாலஸ்தீன பொருளாதார வளர்ச்சிக்கு 50 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கினார். ஆனால் இது பலனற்றதாகப் போனது. தொடர்ந்து 2021, 2023 ஆம் ஆண்டுகளிலும் போர் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.