/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்டார்ட்அப்கள்
/
2023ல் இந்தியாவில் ஒரு ஸ்டார்ட்அப் கூட 100 கோடி டாலர் மதிப்பை தாண்டவில்லை!
/
2023ல் இந்தியாவில் ஒரு ஸ்டார்ட்அப் கூட 100 கோடி டாலர் மதிப்பை தாண்டவில்லை!
2023ல் இந்தியாவில் ஒரு ஸ்டார்ட்அப் கூட 100 கோடி டாலர் மதிப்பை தாண்டவில்லை!
2023ல் இந்தியாவில் ஒரு ஸ்டார்ட்அப் கூட 100 கோடி டாலர் மதிப்பை தாண்டவில்லை!
UPDATED : ஜூலை 01, 2023 10:54 PM
ADDED : ஜூலை 01, 2023 07:18 PM

2023ன் முதல் பாதி முடிந்திருக்கிறது. இந்த 6 மாதத்தில் இந்தியாவில் புதிய யூனிகார்ன் எதுவும் உருவாகவில்லை. அதாவது எந்த ஒரு புதிய ஸ்டார்ட்அப்பும் 100 கோடி டாலர் மதிப்பை தாண்டவில்லை. ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் ஸ்டார்ட்அப்களில் செய்யப்படும் முதலீடு 70 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்தாண்டு இறுதியில் இருந்தே உலகளவில் பொருளாதார நிலைமைகள் சீராக இல்லாததால், முதலீட்டாளர்கள் பணத்தை ஜாக்கிரதையாக வெளியே எடுக்கத் துவங்கினர். அதன் தாக்கம் பங்குச்சந்தை மட்டுமின்றி ஸ்டார்ட்அப்களிலும் எதிரொலித்தது. இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் ஸ்டார்ட்அப்கள் 548 கோடி டாலரை மட்டுமே திரட்ட முடிந்தது. 2022ன் இதே காலக்கட்டத்தில் 1950 கோடி டாலரை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குவித்தன.
![]() |
இந்த ஆண்டு ஸ்டார்ட்அப்களுக்கான நிதி திரட்டும் சுற்றுகளும் மிகவும் குறைவு. 2022 முதல் பாதியில் 1,570 சுற்றுகளாக இருந்த எண்ணிக்கை, தற்போது 546 டீல்களாக குறைந்துள்ளது. ஆரம்ப நிலை நிதி திரட்டலில் 100 கோடி டாலர், சீட் பண்டிங் நிதி திரட்டலில் 35 கோடி டாலர் என்ற அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளன.
2022ல் 19 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றன. அதாவது அவற்றின் சந்தை மதிப்பு 100 கோடி டாலருக்கு மேல் என மதிப்பிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் எந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 100 கோடி டாலருக்கு மேல் என மதிப்பிடப்படவில்லை.
இந்த ஸ்டார்ட்அப் முதலீடுகளை துறை வாரியாக பார்த்தால் நுகர்வோர் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக பணத்தைப் பெற்றுள்ளன. நகர வாரியாக பார்த்தால் பெங்களூரு 287 கோடி டாலர் முதலீட்டைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.