/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்டார்ட்அப்கள்
/
சென்னை, கோவையில் இந்தியன் வங்கியின் ஸ்டார்ட் அப் செல்கள்!
/
சென்னை, கோவையில் இந்தியன் வங்கியின் ஸ்டார்ட் அப் செல்கள்!
சென்னை, கோவையில் இந்தியன் வங்கியின் ஸ்டார்ட் அப் செல்கள்!
சென்னை, கோவையில் இந்தியன் வங்கியின் ஸ்டார்ட் அப் செல்கள்!
UPDATED : ஆக 17, 2023 03:20 PM
ADDED : ஆக 17, 2023 01:55 PM

ஸ்டார்ட்அப்களின் தனித்துவமான மற்றும் பிரத்யேக வங்கித் தேவைகளை கருத்தில் கொண்டு நாட்டின் 10 நகரங்களில் ஸ்டார்ட்அப் செல்களை அமைத்துள்ளது இந்தியன் வங்கி.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்க மத்திய அரசு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐடி துறை, கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறை சார்ந்த பிரச்னைகளுக்கு ஸ்டார்ட்அப்கள் தீர்வளிக்கின்றன. ஏராளமான இளைஞர்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வெளிநாட்டு முதலீடுகள் இந்திய ஸ்டார்ட்அப்களுக்கு குவிகின்றன. தற்போது உலகளாவிய மந்தநிலையால் நிதி வரத்து குறைந்துள்ளது. அவை இன்னும் சில காலாண்டுகளில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கின்றனர்.
![]() |
இந்நிலையில் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கி, ஸ்டார்ட்அப்களின் சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்ய ஆமதாபாத், பெங்களூரு, கோயம்புத்தூர், சென்னை, புதுடில்லி, குருகிராம், கவுஹாத்தி, ஐதராபாத், கான்பூர் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் ஸ்டார்ட்அப் செல்கள் அமைக்க உள்ளது.
இந்த ஸ்டார்ட்அப் செல்களில் பிரத்யேக ரிலேஷன்ஷிப் மேனேஜர்கள் இருப்பார்கள். வங்கியின் தற்போதைய தயாரிப்புகளைத் தவிர, கார்ப்பரேட் கிரெடிட் கார்டுகள், கடன் வசதிகள், பணப்பரிமாற்ற சேவைகள் போன்றவற்றை வழங்க உள்ளனர். மேலும் ஸ்டார்ட்அப்களின் நிதி தேவைகளுக்கு ஏற்ப கடன் வழங்குவார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியன் வங்கியின் சி.இ.ஓ., எஸ்.எஸ்.ஜெயின், “இந்தியன் வங்கியின் பயணத்தில் ஸ்டார்ட்அப் செல்கள் அறிமுகமானது ஒரு முக்கிய மைல்கல். இந்தியாவில் ஸ்டார்ட்அப் சூழலின் வளர்ச்சிக்கு இது ஆதரவாக இருக்கும்.” என குறிப்பிட்டார்.