/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்டார்ட்அப்கள்
/
இந்த செயலி இருந்தால் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டியதில்லை
/
இந்த செயலி இருந்தால் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டியதில்லை
இந்த செயலி இருந்தால் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டியதில்லை
இந்த செயலி இருந்தால் விவசாய நிலத்திற்கு செல்ல வேண்டியதில்லை
UPDATED : ஜூன் 14, 2023 04:46 PM
ADDED : ஜூன் 14, 2023 04:39 PM

பெங்களூருவைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்பான சத்யுக்த் அனலிட்டிக்ஸ், நபார்டு ஆதரவு பெற்ற வேளாண் தொழில்நுட்ப முதலீட்டாளரான நாப்வென்சர்ஸ் (NABVENTURES) இடமிருந்து ரூ.10 கோடி நிதியை 'ப்ரீ சீரிஸ் ஏ' (Pre Series - A) எனும் நிதி திரட்டல் சுற்றில் பெற்றுள்ளது.
சத்யுக்த் ஸ்டார்ட்அப் சத் குமார் தோமர் மற்றும் யுக்தி கில் ஆகியோரால் 2018ல் துவங்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஸ்டார்ட்அப் இது. விவசாயிகள் விளை நிலத்துக்குச் செல்லாமல் தங்கள் மொபைல் போனிலேயே மண்ணின் தரத்தை, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை தெரிந்துகொள்ள இவர்களது பிரத்யேக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இவர்களது நிறுவனம் Sat2farm எனும் செயலியை உருவாக்கியுள்ளது. செயற்கைகோள் அடிப்படையில் இயங்கும் விவசாயம் தொடர்பான செயலி இது. விளை நிலத்தின் வளம், நீர் பாசன ஆலோசனை, வானிலை முன்னறிவிப்புகள் என பல வசதிகளை இது பயனர்களுக்கு வழங்குகிறது. அடுத்ததாக Sat2credit எனும் செயலியையும் இவர்கள் நிர்வகிக்கிறார்கள். இந்த செயலி கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு விவசாய நிலத்தின் கடன் தகுதி பற்றிய அறிக்கை அளிக்கக் கூடியது.
![]() |
தற்போது நாப்வென்சர்ஸ் மூலம் திரட்டியுள்ள ரூ.10 கோடி நிதியை மேற்கூறிய 2 செயலிகளை மேம்படுத்த பயன்படுத்த உள்ளனர். அவை தவிர வேளாண் இடுபொருள் நிறுவனங்களுக்கு Sat4agri மற்றும் வேளாண் காப்பீடு நிறுவனங்களுக்கு Sat4risk போன்ற புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.
சத்யுக்த்தில் முதலீடு செய்துள்ள NABVENTURES-ன் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் ரஞ்சன் தெரிவிக்கையில், “சத்யுக்த் அனலிட்டிக்ஸ் இந்தியாவில் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை அளவிடும் ஒரே ஸ்டார்ட்அப்.” என்றார்.