/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்டார்ட்அப்கள்
/
ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான வசதியை மத்திய அரசு செய்துகொடுக்கும்: அமைச்சர் பியூஷ் கோயல்
/
ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான வசதியை மத்திய அரசு செய்துகொடுக்கும்: அமைச்சர் பியூஷ் கோயல்
ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான வசதியை மத்திய அரசு செய்துகொடுக்கும்: அமைச்சர் பியூஷ் கோயல்
ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான வசதியை மத்திய அரசு செய்துகொடுக்கும்: அமைச்சர் பியூஷ் கோயல்
UPDATED : ஜூலை 05, 2023 12:20 AM
ADDED : ஜூலை 04, 2023 05:46 PM

ஸ்டார்ட்அப்20 என்ற மாநாடு குருகிராமில் நடக்கிறது. அதில் பேசிய மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வசதி வாய்ப்புகளை தான் மத்திய அரசு ஏற்படுத்துமே தவிர அவற்றை கட்டுப்படுத்தாது என கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்ட்அப் அபரிமித வளர்ச்சி கண்டு வருகிறது. இந்திய இளைஞர்கள் தொடங்கும் ஸ்டார்ட்அப்களில் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள், பிரபலங்கள் ஆகியோர் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர். அவற்றில் பல நிறுவனங்கள் பிரபலமாக உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்டதாகவும் விளங்குகின்றன.
![]() |
இந்நிலையில் ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை தாங்குகிறது. ஜி20 குழுவின் ஒரு பகுதியான ஸ்டார்ட்அப்20 தொடர்பு குழு ஒரு மாநாட்டை திங்களன்று கூட்டியது. அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பேசுகையில், “ஸ்டார்ட்அப் சூழலுக்கு உகந்த வசதிகளை தான் அரசுகள் செய்யுமே தவிர அவற்றை நிர்வகிக்கவோ, கட்டுப்படுத்தவோ முயலாது. இது ஜி20 நாடுகளின் உறுதிமொழி. இச்செய்தி ஜி20 நாடுகளை தாண்டியும் செல்ல வேண்டும். வளரும் தொழில்முனைவோருக்கு ஆரம்ப உந்துதலை வழங்குவதே அரசாங்கங்களின் பணி. ஸ்டார்ட்அப் உலகிற்கு இந்தியா ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.” என்றார்.
மேலும் இந்திய ஸ்டார்ட்அப்களில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்தார். “இங்கு தான் துடிப்புள்ள மக்கள் தொகை, திறமையான, ஏற்றுக்கொள்ள தக்க விலையிலான, வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சூழல் போன்ற நன்மைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை ஆராய வருமாறு உலக நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன்.” என கூறினார்.