/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்டார்ட்அப்கள்
/
ஆடைகளை வாடகைக்கு விடும் தொழிலில் அசத்தும் பெண் தொழிலதிபர்..!
/
ஆடைகளை வாடகைக்கு விடும் தொழிலில் அசத்தும் பெண் தொழிலதிபர்..!
ஆடைகளை வாடகைக்கு விடும் தொழிலில் அசத்தும் பெண் தொழிலதிபர்..!
ஆடைகளை வாடகைக்கு விடும் தொழிலில் அசத்தும் பெண் தொழிலதிபர்..!
UPDATED : ஆக 14, 2023 03:30 PM
ADDED : ஆக 14, 2023 03:25 PM

அமெரிக்காவில் உயர்தர ஆடைகளை வாடகைக்கு விடும் தொழிலை நிறுவி, ஜெனிபர் ஹைமன் என்பவர் வெற்றிகரமான பெண் தொழிலதிபராக வலம் வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் தலைமையிடமாக கொண்ட ரென்ட் தி ரன்வே (Rent the Runway ) என்ற பெயரில், ஆன்லைனில் உயர்தர ஆடைகளை வாடகைக்கு விடும் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 120 மில்லியன் டாலரை தாண்டியுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட முதல் பெண் தொழில்முனைவோர் நிறுவனம் என்ற பெருமை இந்நிறுவனத்தை சாரும்.
![]() |
ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் பயின்ற தனது கல்லூரி தோழி ஜெனிஃபர் பிளைஸ் உடன் இணைந்து ஜெனிபர் ஹைமன், 2009ம் ஆண்டு இந்த தொழிலை துவங்கினார். ஜெனிஃபர் ஹைமனின் சகோதரி, தனது திருமணத்திற்கு பெர்க்டார்ஃப்ஸுக்குச் சென்று சில ஆயிரம் டாலர்கள் செலவு செய்து மார்சேசா ஆடையை வாங்கி உள்ளார். கிரெடிட் கார்டு மூலம் வாங்கப்பட்ட ஆடை, அவரை கடனில் தள்ளியது. திருமணம், பார்ட்டி போன்ற விசேஷங்களுக்காக ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே அணியக்கூடிய ஆடைகளுக்கு அதிகம் செலவிடுவது பொருளாதார ரீதியில் பிரச்னையாக இருப்பதை ஜெனிபர் ஹைமன் கண்டறிந்தார்.
![]() |
நவம்பர் 2008ல் உயர்தர ஆடைகளை வாடகைக்கு விடலாமென ஜெனிபர் ஹைமனுக்கு ஐடியா தோன்றியுள்ளது. ஓராண்டுக்கு பின்னர், சரியாக நவம்பர் 2009ல் ரென்ட் தி ரன்வே நிறுவனத்தை ஜெனிபர் ஹைமன் துவங்கினார். அப்போது நிலவிய பொருளாதார மந்தநிலையால், அனைவரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கவே, ஹைமனுக்கு புதிய தொழில் நன்கு கைகொடுத்துள்ளது. முன்னர் விசேஷங்களுக்கு அணியக்கூடிய ஆடைகளை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருந்து, வாடகைக்கு எடுத்து அணிவது நல்ல வரவேற்பை பெற்றது.
![]() |
ஜெனிஃபர் ஹைமன் கூறுகையில், 'பூமியில் அதிக கழிவுகளை வெளியேற்றும் துறைகளுள் பேஷன் துறையும் ஒன்று. 70 சதவீத நச்சுக்கழிவுகள் புதிய ஆடை உற்பத்தியில் இருந்து வருகிறது. எந்தளவு மாசுபாட்டை ஏற்படுத்துகிறதென தெரியாமல், நாம் அனைவரும் அதிகளவில் பேஷன் சார்ந்த பொருட்களை வாங்கி குவிக்கிறோம். நுகர்வோராக நமக்கு இரு வாய்ப்புகள் உண்டு. ஒன்று, தேவையான ஆடை வகைகளை வாங்குவது, மீண்டும் அதே வகையான ஆடைகளை அணிவது அல்லது நீங்கள் ரென்ட் தி ரன்வே சென்று, ஒவ்வொரு நாளும் விதவிதமாக ஆடைகளை அணிவது. என்னை பொறுத்தவரை, சிறந்த ஆடை என்பது அணியும் போது, தன்னம்பிக்கையாக உணர வைக்க வேண்டும்'என்கிறார்.
ஜெனிஃபர் ஹைமனின் வெற்றி மந்திரம் :
1.பிரச்னையை கண்டறிவது :
திருமணத்தின் போது நாம் அனைவரும் விலை உயர்ந்த சிறப்பு ஆடைகளை ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே அணிவோம். இதற்கு அதிக செலவு வைப்பதை, ஜெனிபர் ஹைமன் சரியான நேரத்தில் கண்டறிந்தார்.
2.பிரச்னைக்கு தீர்வு காண்பது :
பிரச்னையை கண்டறிந்த பின்னர், சந்தை எதிர்ப்பார்ப்பு என்ன, களநிலவரங்கள் எப்படி
இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சித்தார்.
3.தீர்வை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது :
ரென்ட் தி ரன்வே நிறுவனத்தை துவங்கும் முன்னர், நிறுவனத்துக்கான ஐடியாவை
கூறிய போது, டிசைனர் டயான் வான் ஃபர்ஸ்டன்பெர்க் அதனை நிராகரித்துள்ளார்.
ஹைமனின் நியாயமான வாதங்களை கேட்ட பின்னர் அவர் ஒப்புகொண்டுள்ளார்.