sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

டெக்னாலஜி

/

ஸ்டார்ட்அப்கள்

/

விவசாயிகளை வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட்அப் செயலி!

/

விவசாயிகளை வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட்அப் செயலி!

விவசாயிகளை வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட்அப் செயலி!

விவசாயிகளை வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட்அப் செயலி!


UPDATED : ஜூலை 25, 2023 07:56 PM

ADDED : ஜூலை 25, 2023 07:54 PM

Google News

UPDATED : ஜூலை 25, 2023 07:56 PM ADDED : ஜூலை 25, 2023 07:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிசான்கனெக்ட் எனும் ஸ்டார்ட்அப் 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதில் தற்போது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி முதலீடு செய்துள்ளார். இந்த செயலி விளைபொருட்களை உற்பத்தி செய்யும் 5 ஆயிரம் விவசாயிகளையும், மும்பை, புனேவைச் சேர்ந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளரையும் இணைக்கிறது. இதன் மூலம் குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் என்கின்றனர்.

கிசான்கனெக்ட் நோக்கம் குறித்து அதன் சி.இ.ஓ., விவேக் நிர்மல் கூறுகையில், இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருட்கள் வீணாவதை குறைத்து, தரமானவற்றை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்க உதவுவது தான் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். இந்த செயலியில் கிசான் டிரேஸ் (Kisan Trace) என்ற வசதி தரப்பட்டுள்ளது. அதன் மூலம் நுகர்வோர் பெறும் காய்கறிகள், பழங்கள் எந்த பண்ணையில் இருந்து வருகிறது. அந்தப் பண்ணையின் விவசாய நடைமுறைகள் என முழுத் தகவலையும் நுகர்வோருக்கு வழங்குகிறது. இது விளைபொருளின் தரம் குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் என்கின்றனர்.

Image 1145553


மறுபுறம் விவசாயிகளுக்கு மண் மேம்பாடு, ரசாயனங்களுக்குப் பதிலாக உயிர் உரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவர்களின் பயிர்களுக்கு விஞ்ஞான வேளாண்மை திட்டங்களை வழங்குதல் போன்ற அம்சங்களைக் கவனித்து 'பொறுப்பான விவசாய நடைமுறைகளை' கடைப்பிடிப்பதாக கூறுகிறது.

தற்போது இந்த செயலியில் 5000 விவசாயிகள் இணைந்துள்ளனர். மஹாராஷ்டிராவின் இருபெரும் நகரங்களான மும்பை மற்றும் புனேவில் சேவை வழங்குகின்றனர். இந்த நகரங்களைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் அதிகமான நுகர்வோர் இச்செயலி மூலம் விளைபொருட்களை வாங்குகின்றனர். அதற்கான விநியோகச் சங்கிலியை இச்செயலி கவனிக்கிறது. பிற இந்திய நகரங்களுக்கும் இதனை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us