/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்டார்ட்அப்கள்
/
உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும் 10 வழிகள்..!
/
உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும் 10 வழிகள்..!
UPDATED : ஜூன் 20, 2023 04:47 PM
ADDED : ஜூன் 20, 2023 04:45 PM

பணியிடம் அல்லது தொழிலில் உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும் 10 வழிகள் குறித்து பார்ப்போம்.
1. சரியான திட்டமிடல் :
ஒரு நாளை துவங்கும் முன், சரியான திட்டமிடல் அவசியம். அன்றைய தினத்திற்குள் முடிக்க வேண்டிய வேலைகள் என்னென்ன என்பதை வரிசையாக பட்டியலிட வேண்டும்.
2. இடைவெளி அவசியம் :
வாழ்க்கை - வேலை சமநிலையை பாரமரிக்க உரிய இடைவெளி எடுத்து கொள்ளுதல் அவசியம். நீங்கள் உணவைத் தவிர்க்கும் அளவுக்கு உங்கள் வேலையில் மூழ்கிவிடுவது எளிது அல்லது நீங்கள் சோர்வடையும் வரை கவனம் செலுத்துங்கள். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் திரும்புகையில், வேலையில் கவனம் செலுத்த உதவும்.
3. ஆரோக்கியமான சமச்சீர் உணவு :
ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகள் எடுத்து கொள்ள முன்னுரிமை அளிப்பது உடலுக்கு ஆற்றலை அளிக்கும். வெறும் வயிற்றுடன் யாரும் வேலை செய்ய முடியாது. மாலை நேரங்களில் எடுத்து கொள்ளும் நொறுக்குதீனிகள் கூட ஆற்றலை அதிகரிக்க
உதவலாம்.
4. தினமும் ஒரு இலக்கை நிர்ணயிங்கள்:
குறிப்பிட்ட லட்சியத்தை அடைய, அன்றாடம் ஒரு இலக்கை நிர்ணயித்து
கொள்ளுங்கள். தினமும் அடைய வேண்டிய இலக்கை, சிறு பகுதியாக மாற்றி
கொள்ளுங்கள். அதனை குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் முடிக்க முடியும்.
![]() |
5. சமூகவலைதளம் வேண்டாம் :
பல அலுவலகங்களில் , பணியாளர்கள் தங்களது வேலைநேரங்களில் சமூகவலைதளங்கள் பயன்படுத்த தடை உள்ளது. சமூகவலைதள பயன்பாடு, நேரத்தை வீணடித்து கவனத்தை சிதறடிக்கலாம்.
6. சுய விருப்பத்தை வளருங்கள்:
ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் சோர்வு, உற்பத்தி திறனை பாதிக்கலாம். உங்களை புதுப்பித்து கொள்ள மிகவும் பிடித்தவற்றை அது புத்தகம் அல்லது பத்திரிகை படித்தல், மற்ற ஏதோ ஒன்றை பின்பற்ற வேண்டும்.
7. உடற்பயிற்சி மறக்க வேண்டாம் :
தினமும் காலையில் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது
இதயம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து உங்களை விலக்கி வைக்கும். மேலும்
உங்களை அன்றைய தினம் ஆற்றல்மிக்கவராக உணர வைக்கும்.
8. காலக்கெடு நிர்ணயம் செய்யுங்கள்:
முக்கியமான வேலையை முடிக்க உங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை நீங்களே
நிர்ணயித்து கொள்ளுங்கள். ஒரே ஒரு இலக்கை நிறைவேற்ற, அதிக நேரத்தை
செலவிட கூடாது.
![]() |
9. காலை உணவை தவிர்க்க வேண்டாம் :
சமச்சீரான காலை உணவை தவற விட வேண்டாம். காலை உணவு உண்ட பின்பே, உடல் கவனத்துடன், விழிப்புடன் செயல்பட முடியும். காலை உணவை தவிர்த்தால், உடல் மந்தத்துடன், வேலையிலும் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
10. ஒரே நேரத்தில் பல வேலை வேண்டாம் :
உங்கள் அனைத்து வேலைகளையும் முடிக்க, ஒரே நேரத்தில் வேலை செய்வது
சரியான வழி போல தோன்றலாம். ஆனால் உண்மையில், உங்கள் முழு உற்பத்தி
திறனை வெளிகொண்டு வர உதவுவதற்கு பதில், தடையாக இருக்கும்.