/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்டார்ட்அப்கள்
/
தொழில்முனைவோர்கள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..!
/
தொழில்முனைவோர்கள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..!
தொழில்முனைவோர்கள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..!
தொழில்முனைவோர்கள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..!
UPDATED : ஜூன் 16, 2023 04:56 PM
ADDED : ஜூன் 16, 2023 04:43 PM

இன்றைய போட்டி நிறைந்த சூழலில், சவால்களை எதிர்கொள்வது மட்டுமின்றி, அதில் உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுபவரே வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வர முடியும். தொழில்முனைவோர்கள் பார்க்க தவறவிட கூடாத 10 திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்
1. தி பர்சூட் ஆப் ஹாப்பினஸ் (The Pursuit of Happiness) :
2006ல் வெளியான இப்படத்தில் வில் ஸ்மித் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்பா - மகன் பாசப்போராட்டம், பல பிரச்னைகளுக்கு மத்தியில், சவாலை கடந்து வில் ஸ்மித் தனது லட்சியத்தை அடைந்தாரா என்பதை பல உணர்வுகளுடன் வெளிப்படுத்திய படம்.
2. தி சோஷியல் நெட்வொர்க் ( The Social Network)
2010ம் ஆண்டு வெளியான சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனரும் ஹார்வர்டு பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவருமான மார்க் ஸக்கர்பெர்க்கின் வாழ்கையை
மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம். எப்படி விளையாட்டாக ஆரம்பித்த பேஸ்புக், சாதித்தது என்பதையும், அதற்காக ஸ்க்கர்பர்க் செய்த வேலைகளையும் படம் பேசுகிறது.
3. தி ஃபவுண்டர் (The Founder) :
2016ம் ஆண்டு வெளியான இப்படம், மில்க்ஷேக் இயந்திர விற்பனை பிரதிநிதியாக துவங்கி, வாழ்க்கையில் பல தொழில்களை செய்து ,தனது 59வது வயதில் மெக்டொனால்டு நிறுவனத்தை வாங்கி, அதன் வாயிலாக சாதித்த ரே க்ரோக்கின் கதை தான். திறமை, அறிவு, கல்வி மட்டும் போதாது. விடாமுயற்சியும், மன உறுதியும் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற வைக்குமென்பதை ஆணித்தரமாக கூறும் படமாக அமைந்துள்ளது.
4. தி வுல்ப் ஆஃப் வால்ஸ்டீரிட் : (The Wolf of Wall Street) :
2013ல் வெளியான இப்படம், பங்குச்சந்தை புரோக்கராக இருந்து மிகப்பெரும் கோடீஸ்வராக மாறும் ஜோர்டன் பெல்போர்ட்டின் கதை தான் இப்படம். பணம், செக்ஸ், போதை போன்றவற்றிற்கு அடிமையாக மாறும் கேரக்டரில் லியார்னோடா காப்ரியல் கலக்கியிருப்பார். மார்க்கெட்டிங்கில் வல்லவரான ஜோர்டன், 10 பேருடன் புதிய நிறுவனத்தை துவங்கி பெரிய நிறுவனமாக வளர்ந்தெடுப்பார். பின்னர் வாழ்வில் எதிர்கொள்ளும் தோல்வி, சவால்கள் என படம் செல்லும்.
5. மணிபால் (Moneyball) :
2011ல் வெளியான இப்படம், ஓக்லாண்ட் அணியின் மேலாளர் பில்லி பீனின் வெற்றிகரமான முயற்சியின் கதை. ஒரு பேஸ்பால் கிளப்பை ஒரு பட்ஜெட்டில் தனது வீரர்களை உருவாக்குவதற்கு கணினி மூலம் உருவாக்கப்பட்ட பகுப்பாய்வை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் படம். பில்லி பீனாக, ஹாலிவுட்
நடிகர் பிராட் பிட் நடித்திருப்பார்
![]() |
6. பைரேட்ஸ் ஆப் தி சிலிக்கான் வேலி ( Pirates of the Sillicon Valley) :
1999ம் ஆண்டு வெளியான இப்படம், ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை மற்றும் மைக்ரோசாப்ட்டின் பில்கேட்ஸ் இடையேயான போட்டி வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் பேசுகிறது.
7. தி பிக் ஷார்ட் ( The Big Short) :
அமெரிக்காவில் வங்கிகள் கொடுக்கும் வீட்டுக்கடனால் வங்கிகள் வீழ்ச்சியடைந்த கதையை அடிப்படையாக கொண்ட இப்படம், 2015ல் வெளியானது. 2008ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை அனுமானிக்கும் 3 பேர், அதில் இருந்து சம்பாதித்தார்களா, அதள பாதாளத்தில் விழுந்த பொருளாதாரத்தை எப்படி அரசு பொய் சொல்லி
காப்பாற்றுகிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கும்.
8. கேட்ச் மீ இஃப் யூ கேன் ( Catch me if you can):
2002ல் வெளியான இப்படம், 1960ம் ஆண்டுகளில் போலி காசோலை மூலம் மில்லியன் கணக்கில் கொள்ளையடித்த ஒருவரை பற்றிய கதை தான். ஆடம்பரமாக வாழ்ந்த
தனது தொழிலதிபர் தந்தை நஷ்டத்தால் தெருவுக்கு வந்துவிடவே, ஒரே ஒரு செக் புக் வைத்து வீட்டை விட்டு வெளியேறும் அவர், திடீர் பைலட், டாக்டர், வழக்கறிஞர் என மோசடியாக சம்பாதிக்கிறார். ஒருகட்டத்தில் எஃப்.பி.ஐ அதிகாரியிடம் சிக்கி, ஆயுள் தண்டனை பெறும் ஃபிராங்க் அபிக்னேல், பின்னர் உண்மையாக பைலட்டாக மாறுவதே
கதையாகும்.
![]() |
2005ல் வெளியான இப்படம், ஒரு ஆயுத வியாபாரி நிக்கோலஸ் கேஜ், இண்டர்போல் ஏஜெண்டால் துரத்தப்படுவதால் எதிர்கொள்ளும் பிரச்னை பற்றிய கதை தான். இதில்
சர்வாதிகார காலத்தில் துப்பாக்கி வியாபாரம் மற்றும் அதன் வரலாற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
10. ரோக் டிரேடர் (Rogue Trader):
1999ல் வெளியான இப்படம், ஒரு பெரிய முதலீட்டு வங்கியான பேரிங்ஸில் பணிபுரியும் ஒரு இளைஞன். சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள வங்கியின் கிளையில் அதிகாரப் பதவியில் அமர்த்தப்பட்ட லீசன், ஆபத்தை விளைவிக்கும் வர்த்தகத்தைச் செய்ய, வளர்ந்து வரும் ஆசிய சந்தையைப் பயன்படுத்திக் கொள்கிறார். விரைவில், தலைமை பொறுப்பேற்று இழப்புகளை மறைக்க முயற்சிக்கிறார். தனது அழகான மனைவியான லிசா உடன் நாட்டை விட்டு வெளியேறும் லீசன், இறுதியில் சந்திக்கும் விளைவுகள் பற்றி படம் பேசும்.