/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
டைட்டானியம் ஃப்ரேமில் சாம்சங் கேலக்ஸி எஸ்24; ஜனவரியில் அறிமுகமா?
/
டைட்டானியம் ஃப்ரேமில் சாம்சங் கேலக்ஸி எஸ்24; ஜனவரியில் அறிமுகமா?
டைட்டானியம் ஃப்ரேமில் சாம்சங் கேலக்ஸி எஸ்24; ஜனவரியில் அறிமுகமா?
டைட்டானியம் ஃப்ரேமில் சாம்சங் கேலக்ஸி எஸ்24; ஜனவரியில் அறிமுகமா?
UPDATED : அக் 09, 2023 05:04 PM
ADDED : அக் 09, 2023 05:00 PM

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்23 சீரிஸை தொடர்ந்து கேலக்ஸி எஸ்24 சீரிஸை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் மற்றும் கேட்ஜெட்ஸ் பிராண்டான சாம்சங் நிறுவனம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தனது கேலக்ஸி எஸ்23 சீரிஸை அறிமுகம் செய்து விற்பனைக்கு வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்த படைப்பான கேலக்ஸி எஸ்24 சீரிஸை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]() |
சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸில் S24, S24+ மற்றும் கேலக்ஸி S24 அல்ட்ரா ஆகிய வேரியன்ட்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இதில் ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் வழங்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. அதோடு, 120Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் கொண்ட QHD+ Dynamic AMOLED LTPO டிஸ்பிளே இடம்பெறலாம் எனத் தெரிகிறது. மேலும் முக்கிய அம்சமாக இந்த கேலக்ஸி எஸ்24 சீரிஸில், ஐபோன் 15 சீரிஸில் உள்ள அதே டைட்டானியம் ஃப்ரேம் அல்லது, கேலக்ஸி S23 அல்ட்ராவில் வழங்கப்பட்ட அதே அலுமியம் பிரேம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
![]() |
சாம்சங் நிறுவனம் வியட்நாமில் உள்ள அதன் உள்நாட்டு உற்பத்தியில், கேலக்ஸி S24 மாடலுக்கான டைட்டானியம் பிரேம்களை தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த டைட்டானியம் ஃப்ரேம் எஸ்24 அல்ட்ரா மாடலில் மட்டுமே இடம்பெறும் எனவும் தகவல் கசிந்துள்ளது. அதேபோல், முந்தைய கேலக்ஸி சீரிஸ்களில் உள்ளதைப் போன்று 200 எம்பி சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா செட்டப் இடம்பெறவுள்ளது. இத்துடன் 12MP மற்றும் 50MP கேமராக்கள் வழங்கப்படவுள்ளது. 12 எம்பி செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர சாம்சங்கின் S பென் சப்போர்ட் உடன் வருகிறது.
![]() |
கேலக்ஸி S24 அல்ட்ரா போனில் 5000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும் இடம்பெறும் எனக்கூறப்படுகிறது. தற்போது வரை முழுமையான விவரங்கள் ஏதும் சாம்சங் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் வரும் ஜனவரி 18ல் விற்பனைக்கு வரலாம் என தகவல் கசிந்துள்ளது.