/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
432 எம்பி கொண்ட அதிநவீன கேமராவை உருவாக்கும் முயற்சியில் சாம்சங்..!
/
432 எம்பி கொண்ட அதிநவீன கேமராவை உருவாக்கும் முயற்சியில் சாம்சங்..!
432 எம்பி கொண்ட அதிநவீன கேமராவை உருவாக்கும் முயற்சியில் சாம்சங்..!
432 எம்பி கொண்ட அதிநவீன கேமராவை உருவாக்கும் முயற்சியில் சாம்சங்..!
UPDATED : அக் 09, 2023 04:32 PM
ADDED : அக் 09, 2023 04:31 PM

சாம்சங் நிறுவனம் ஒரு இஞ்ச் அளவு கொண்ட மொபைல் இமேஜ் சென்சாரான ஐஸோசெல் ஹெச்டபல்யூ 1, 2 (ISOCELL HW1 and HW2) பயன்படுத்தி இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிநவீன கேமரா ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போமா?
வரும் 2025 ஆம் ஆண்டு கேலக்ஸி எஸ்-25 ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. 2026 ஆம் ஆண்டு கேலக்ஸி எஸ் 26 வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் 432 மெகாபிக்சல் சென்சார் கொண்ட கேமராவை வெளியிட சாம்சங் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. நமது கண்ணின் கருவிழிகள் 576 எம்பி ரெசல்யூஷன் கொண்டவை. ஆப்பிள் ஐஃபோனின் ரெசல்யூஷன் கூட மனித கண்களில் இந்த ரெசல்யூஷனைக் காட்டிலும் பன்மடங்கு குறைவு.
கேமரா தொழில்நுட்பத்துக்குப் பெயர்போன சாம்சங், தற்போது மனிதர்களின் கண்களது ரெசன்யூஷன் அளவுக்கு தனது உயர்ரக ஸ்மார்ட்போனின் ரெசல்யூஷனை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது. சாம்சங்கின் ப்ரீமியம் ஸ்மார்போன் மாடலான கேலக்ஸி இசட் ஃபோல்டின் விலை ஒன்றரை லட்சத்தைத் தாண்டும். இதில் ஐசோசெல் ஜிஎன்-3 சென்சார் பொருத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது.
![]() |
டிஎஸ்எல்ஆர், ஹேண்டிகேம் தரத்தில் ஸ்மார்ட்போன் கேமராவை தயாரிக்க முயலும் சாம்சங், இந்த அதிநவீன சென்சார் ஸ்மார்ட்போனை சந்தையில் இறக்கினால் உலக செல்வந்தவர்கள் பலர் முதலில் இவற்றை வாங்குவது உறுதி..!