sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

டெக்னாலஜி

/

ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்

/

விரைவில் அதிவேக பிராஸசருடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி

/

விரைவில் அதிவேக பிராஸசருடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி

விரைவில் அதிவேக பிராஸசருடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி

விரைவில் அதிவேக பிராஸசருடன் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி


UPDATED : செப் 25, 2023 02:20 PM

ADDED : செப் 25, 2023 02:18 PM

Google News

UPDATED : செப் 25, 2023 02:20 PM ADDED : செப் 25, 2023 02:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. இதுபோக வரும் ஆண்டுகளில் பல்வேறு புதுமுக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி சாம்சங் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ54 5ஜி மாடலைத் தொடர்ந்து, ஏ55 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஏ55 5ஜி குறித்த ரெண்டர்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

Image 1174504


இந்த கேலக்ஸி ஏ55 போனில் முக்கிய அம்சமாக அதேவேக எக்ஸிநோஸ் 1480 (Exynos 1480 SoC) சிப்செட் வசதியைக் கொண்ட அதிவேக பிராஸசர் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, டிஸ்பிளேவில்120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன்கூடிய 6.4 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அனேகமாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வழங்கப்படலாம். இதன் சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.

ஆனால் முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி ஏ54 மாடலை பொறுத்தவரை, கேமிங் பிரியர்களுக்காக மாலி - ஜி68 எம்பி5 ஜிபியு (Mali-G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி என இரு ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரலாம். இதுதவிர டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதன்படி, 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி டேப்த் சென்சார் கேமரா மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு 32 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Image 1174503


சாம்சங் கேலக்ஸி ஏ54 மாடல் ஆவ்சம் லைம் (Awesome Lime), ஆவ்சம் கிரோபைட் (Awesome Graphite) மற்றும் ஆவ்சம் வயலெட் (Awesome Violet) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.38,999 ஆக விற்பனைக்கு கிடைக்கிறது. கேலக்ஸி ஏ55 5ஜி மாடலின் விலை அறிமுகத்திற்கு பிறகு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us