/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
பிக்சல் 8 ப்ரோவுடன் பிக்சல் வாட்ச் 2 இலவசமா? கூகுளின் டபுள் ட்ரீட்!
/
பிக்சல் 8 ப்ரோவுடன் பிக்சல் வாட்ச் 2 இலவசமா? கூகுளின் டபுள் ட்ரீட்!
பிக்சல் 8 ப்ரோவுடன் பிக்சல் வாட்ச் 2 இலவசமா? கூகுளின் டபுள் ட்ரீட்!
பிக்சல் 8 ப்ரோவுடன் பிக்சல் வாட்ச் 2 இலவசமா? கூகுளின் டபுள் ட்ரீட்!
UPDATED : அக் 03, 2023 06:05 PM
ADDED : அக் 03, 2023 06:03 PM

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 ப்ரொ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் பிக்சல் வாட்ச் 2 இலவசமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நாளை (அக்டோபர் 4, 2023) அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதுகுறித்த அடுக்கடுக்காக தகவல் கசிந்து வந்தநிலையில்,. சமீபத்தில் வெளிவந்த டீஸரில்கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் பிக்சல் வாட்ச் 2 இலவசமாக இணைக்கப்பட்டுள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை முதற்கட்டமாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிக்சல் வாட்ச் 2 இலவசமாக வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.
![]() |
மூன்றாம் தலைமுறை டென்சார் ஜி3 சிப்செட், 6.7 இன்ச் அமோலெட் 120Hz டிஸ்ப்ளே, 50எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 48எம்பி ஆட்டோபோகஸ் லென்ஸ் மற்றும் 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என ட்ரிபிள் கேமரா செட்டப் என அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரவிருக்கும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனில் 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
![]() |
ஸ்டோரேஜுக்கு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/1டிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 23 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5050 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை $999 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 85 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |
ஆனால் கூகுள் நிறுவனம் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் பிக்சல் வாட்ச் 2 இலவசமாக வழங்கபடுவதாக இன்னும் உறுதியான தகவல் வெளியிடவில்லை. அக்டோபர் 4ம் தேதி அறிமுகத்தன்று முழுமையான தகவல் வெளிவரலாம். அவ்வாறு பிக்சல் 8 ப்ரோ போனுடன் இலவசமாக பிக்சல் வாட்ச் 2 வழங்கப்படும் பட்சத்தில் பிக்சல் வாடிக்கையாளர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும்.