/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
ஒன்பிளஸ் ஏஸ் 3; சீனாவில் அக்டோபரில் ரிலீஸ்; இந்தியாவில் எப்போது?
/
ஒன்பிளஸ் ஏஸ் 3; சீனாவில் அக்டோபரில் ரிலீஸ்; இந்தியாவில் எப்போது?
ஒன்பிளஸ் ஏஸ் 3; சீனாவில் அக்டோபரில் ரிலீஸ்; இந்தியாவில் எப்போது?
ஒன்பிளஸ் ஏஸ் 3; சீனாவில் அக்டோபரில் ரிலீஸ்; இந்தியாவில் எப்போது?
UPDATED : செப் 28, 2023 05:41 PM
ADDED : செப் 28, 2023 05:38 PM

ஒன்பிளஸ் நிறுவனம் சீன சந்தையில் ஒன்பிளஸ் ஏஸ் 3 மாடலை இம்மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
ப்ரீமியம் போன்களுக்கு நிகராக இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் விற்பனை செய்து வரும் ஒன்பிளஸ் நிறுவனம், வரும் அக்டோபரில், ஒன்பிளஸ் பேட் கோ, இயர்பட்ஸ், ஒன்பிளஸ் ஏஸ் 3 என எக்கசக்க சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 மாடலை சீனா உட்பட உலக சந்தையில் இம்மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
![]() |
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஏஸ் 3 மாடலை, இந்தியாவில், ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) எனும் பெயரில் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. 6.74-இன்ச் ஒஎல்இடி (OLED) வசதி, 1.5 ரெசொலூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய குவாலிட்டியான எச்டி டிஸ்ப்ளே வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வசதி வழங்கப்படவுள்ளது. ஒன்பிளஸ்-ன் பிரத்யேக கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) மூலம் இயங்கும்.
![]() |
மேலும் இதில், அதிகபட்சமாக 24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படவுள்ளது. கேமராவை பொறுத்தவரை, இந்த ஒன்பிளஸ் ஏஸ்3 மாடலில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் ( Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு ஓம்னிவிஷன் ஓவி8டி10 (OmniVision OV8D10) சென்சார் + 32எம்பி டெலிபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பைக் கொண்டுள்ளது. வீடியோ கால் அழைப்புகளுக்கு 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
![]() |
இத்துடன், 5500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3 மாடலின் விலை நிலவரம் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்பொழுது. இதன் முழு விலை நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும்.