/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ; பார்க்க தான் ப்ரீமியம் லுக்...ஆனா விலை பட்ஜெட் தான்!
/
நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ; பார்க்க தான் ப்ரீமியம் லுக்...ஆனா விலை பட்ஜெட் தான்!
நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ; பார்க்க தான் ப்ரீமியம் லுக்...ஆனா விலை பட்ஜெட் தான்!
நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ; பார்க்க தான் ப்ரீமியம் லுக்...ஆனா விலை பட்ஜெட் தான்!
UPDATED : செப் 30, 2023 06:09 PM
ADDED : செப் 30, 2023 06:07 PM

பட்ஜெட் விலையில் பிரீமியம் அம்சங்களுடன் நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ (Noise Air Buds Pro SE) இயர்பட்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வளர்ந்து வரும் கேட்ஜெட்ஸ் நிறுவனமான நாய்ஸ், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் என பல்வேறு சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. தனித்துவமான டிசைனில், பட்ஜெட் விலையில் கேட்ஜெட்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வரும் இந்நிறுவனம், பட்ஜெட் விலையில் பிரீமியம் அம்சங்களுடன் நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ (Noise Air Buds Pro SE) இயர்பட்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
![]() |
டிசைனை பொறுத்தவரை, ப்ரீமியம் லுக்கிற்காக மெட்டாலிக் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. லஸ்டர் பிளாக் (Lustre Black) மற்றும் ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. நாய்ஸ் கேன்சலேஷன், ஃபாஸ்ட் சார்ஜிங், குயிக் பேரிங் (Quick Pairing) சப்போர்ட்டுக்காக ஹைப்பர் சிங்க் டெக்னாலஜி (Hyper Sync Technology) போன்ற பிரீமியம் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதுதவிர, சிரி (Siri) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் உள்ளது.
![]() |
இந்த இயர்பட்ஸில் அதிகபட்சமாக 30dB வரையில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கும். அதேபோல் வால்யூம் (Volume), மியூசிக் (Music), கால் (Call) மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) போன்றவற்றை கண்ட்ரோல் செய்வதற்கு டச் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி வருகிறது. இதை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு பிளேபேக் டைம் கிடைக்கும்.
![]() |
அதோடு இன்ஸ்டாசார்ஜ் (Instacharge) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 180 நிமிடங்களுக்கு பிளே டைம் கிடைக்கும். இந்த பட்ஸ் IPX5 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water Resistance) திறன் கொண்டுள்ளது. இந்த நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ எஸ்இ வெறும் ரூ.1,699க்கு விற்பனைக்கு வந்துள்ளது.