/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
எல்லோரும் ஓரம் போங்க....மிரட்ட வரும் ஸ்மார்ட்போன்...!
/
எல்லோரும் ஓரம் போங்க....மிரட்ட வரும் ஸ்மார்ட்போன்...!
எல்லோரும் ஓரம் போங்க....மிரட்ட வரும் ஸ்மார்ட்போன்...!
எல்லோரும் ஓரம் போங்க....மிரட்ட வரும் ஸ்மார்ட்போன்...!
ADDED : அக் 07, 2023 05:26 PM

ஸ்மார்ட்போன் விற்பனையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய போன்களை ஐடெல் நிறுவனம் எஸ்23அறிமுகம் செய்து வருகிறது. தற்போது மிரட்டலான பல அம்சங்களுடன் ரூ.12,749க்கு எஸ்23 புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில், 6.78 இன்ச் புல் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு 500நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸூடன் வருகிறது. கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவொரு 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே மாடலாகும்.ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஐடெல் ஓஎஸ் 13 வருகிறது. அதோடு ஆக்டா-கோர் யுனிசோக் டி616 12 என்எம் சிப்செட் வருகிறது.
ஸ்டோரேஜ் பொறுத்தவரையில் 8ஜிபி ரேம் + 8ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி என்ற இரு வேரியண்டில் விற்பனைக்கு வருகிறது. மேலும் 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ செகண்டரி கேமரா வருகிறது. 32 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. தள்ளுபடி விலையில் 8ஜிபி+128ஜிபி ரேம் வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.12,749க்கு விற்பனை செய்யப்படுகிறது.