/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
இது ஷூ-வா, இல்ல லேப்டாப்பா? மூன்றரை லட்ச ரூபாயில் ஓர் வித்யாசமான டெக்னாலஜி..!

UPDATED : அக் 02, 2023 06:03 PM
ADDED : அக் 02, 2023 06:02 PM

நாம் காலை ஜாகிங் செல்ல அணிந்துகொள்ளும் அடிடாஸ், ரீபோக், பூமா, ஸ்கெச்சர்ஸ் போன்ற ஸ்னீக்கர் ஷூ போன்று ஓர் லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்..! சராசரி லேப்டாப் பயன்படுத்தி போர் அடித்தவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லேப்டாப்தான் கூலர் மாஸ்டர் டெக் நிறுவனத்தின் CMODX பிராண்டின் வெளியீடான ஸ்னீக்கர் எக்ஸ் லேப்டாப்.
இந்த லேப்டாப் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஓர் ஷூ போலக் காட்சியளிக்கும். ஆனால் இது ஷூ அல்ல. இதனுள் இன்டல் கோர் ஐ-7-13700 கே சிபியு, என்விடியா ஆர்டிஎக்ஸ் 4070 கிராஃபிக்ஸ் கார்டு, 64 ஜிபி மெமரி, 2 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ், லிக்விட் கூலிங் சிஸ்டம் என ஒரு அதிநவீன கேமிங் லேப்டாப்பில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த லேப்டாப்பின் பாகங்கள் கச்சிதமாக ராட்சத ஸ்னீக்கர் பூட்ஸ் போன்ற கேஸில் பொருத்தப்பட்டுள்ளன.
இதனைக் காண்பவருக்கு இது ஒரு பிரம்மாண்ட ஷூ போலவே தெரியும். ஒரு ராட்சத ஷூவை கையில் எடுத்துக்கொண்டு ஒருவர் டிப் டாப்பாக அலுவலகம் சென்றால் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் நம்மூரில் மென்பொருள் பொறியாளர்கள் இவ்வாறு வித்யாசமான டிசைன் கொண்ட லேப்டாப்களை பணிக்கு எடுத்துச்செல்ல இந்த ஸ்னீக்கர் எக்ஸ் லேப்டாப் தற்போது வித்திட்டுள்ளது.
![]() |