/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
பண்டிகை கால சிறப்பு சலுகை; அதிரடியாக விலை குறைந்த ஆப்பிள் ஐபோன் 13!
/
பண்டிகை கால சிறப்பு சலுகை; அதிரடியாக விலை குறைந்த ஆப்பிள் ஐபோன் 13!
பண்டிகை கால சிறப்பு சலுகை; அதிரடியாக விலை குறைந்த ஆப்பிள் ஐபோன் 13!
பண்டிகை கால சிறப்பு சலுகை; அதிரடியாக விலை குறைந்த ஆப்பிள் ஐபோன் 13!
UPDATED : அக் 05, 2023 07:28 AM
ADDED : அக் 04, 2023 11:54 AM

பண்டிகை கால சிறப்பு சலுகையாக ஆப்பிளின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை மாதமான அக்டோபரில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பிரம்மாண்ட தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகின்றன.
![]() |
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் விற்பனை அக்டோபரில் தொடங்கும். இந்த விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு எக்கசக்க ஆஃபர்கள் வழங்கப்படவுள்ளது. அதன்படி ஐபோன் 13 ன் விலை ரூ.39,999க்கு விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஐபோன் 13-ன் விலை அமேசானில் ரூ. 52,499 என பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக SBI வங்கி கார்டுகளை பயன்படுத்தும்போது தள்ளுபடி மற்றும் பரிமாற்ற சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
![]() |
6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் OLED டிஸ்பிளே கொண்ட ஐபோன் 13ல் 12MP மெயின் + 12MP அல்ட்ரா வைட் + 12MP செல்ஃபீ கேமரா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. ஸ்டார்நைட் , மிட்நைட், பச்சை, நீலம், பிங்க் என மொத்தம் ஐந்து நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 128GB, 256GB, 512GB ஆகிய மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
![]() |
அதேபோல், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறித்து ஃபிளிப்கார்ட் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ஐபோன் 12 ஆனது ரூ.38,999 -க்கு பட்டியலிடப்படும். கூடுதல் சலுகையாக வங்கி கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடியும், ரூ.3,000 தள்ளுபடியும் வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.